சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தைகளில் வெற்றிபெற தேவையான ecosystem சப்போர்ட்டுடன் ION-ஐ வழங்குவதை நோக்கமாகக் கொண்டு TVS மோட்டார் நிறுவனம் இந்த முதலீட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய இரு/மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான TVS-ன் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இருப்பினும் TVS மோட்டார் நிறுவனம் ION-ல் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பது குறித்து தகவல் எதையும் வெளியிடவில்லை. இது தொடர்பான அறிக்கை ஒன்றில் நிலையான மற்றும் அளவிடக்கூடிய பிராண்டுகளுடன் இணைந்திருக்கும் அதே வேளையில், வலுவான தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கான தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப இந்த பார்ட்னர்ஷிப் இருப்பதாக TVS குறிப்பிட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சுதர்சன் வேணு கூறுகையில், எங்களது TVS மோட்டார் நிறுவனம் உலகளாவிய சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தரமான தயாரிப்புகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. ப்ரீமியம் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன வளர்ச்சியை அதிகரிக்க, சிங்கப்பூரில் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் தளத்தின் வலிமையான குழுவைக் கொண்ட ஃபுல் -ஸ்டேக் EV நிறுவனமான ION Mobility-யுடன் பார்ட்னர்ஷிப் வைத்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்குள் காமன் விஷனை ஷேர் செய்து கொள்கிறோம் மற்றும் ஒரு ஸ்ட்ராடெஜிக் இன்வெஸ்டராக ION-ஐ சப்போர்ட் செய்வதில் ஆர்வமாகவும் இருக்கிறோம் என்றார்.
TVS நிறுவனத்துடனான பார்ட்னர்ஷிப் பற்றி பேசிய ION மொபிலிட்டி நிறுவனரும் மற்றும் CEO-வுமான ஜேம்ஸ் சான் கூறுகையில், எனது குழுவும் நானும் TVS மோட்டாரிடமிருந்து பெற்றிருக்கும் நிதியுதவி மற்றும் பார்னடர்ஷிப் மூலம் மகிழ்ச்சியடைகிறேன். எலெக்ட்ரிக் மற்றும் நிலையான இரு சக்கர வாகன எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இரு சக்கர வாகன உற்பத்தியில் பல ஆண்டு அனுபவம் பெற்ற TVS மோட்டாரின் உலகளாவிய நிபுணத்துவத்தை பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
நிலையான மற்றும் அளவிடக்கூடிய பிராண்டுகளுடன் எங்களை இணைத்து கொள்ள விரும்புகிறோம். இதன் ஒரு கட்டமாகவே எங்களது உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று TVS கூறி இருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட Ion Mobility ஒரு டெக்-ஆட்டோமோட்டிவ் நிறுவனமாகும். இது தென்கிழக்கு ஆசிய சந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் ப்ராடக்ட்ஸ்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது ஆகும்.