உள்நாட்டிலேயே தயாரான இந்தியாவின் முதல் எஸ்யூவி என்ற பெருமையையும் இந்தக் கார் பெற்றுள்ளது. ஜிப்ட்ரான் தொழில்நுட்பத் திறன் உடன் அதிக வோல்டேஜ் சிஸ்டம், அதிவிரைவு சார்ஜிங் திறன், நீடித்த பேட்டரி திறன், அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்கள் என அசத்துகிறது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி.