முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

சாம்சங் முதல் ஐஃபோன் வரை ஜூமிங் கேமராவில் கலக்கும் டாப் 6 மொபைல்களின் பட்டியல்.

 • 17

  கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

  டிஜிட்டல் இந்தியாவில் மொபைல் இல்லை என்றால் அணுவளவும் அசையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நிறைய புது தொழில்நுட்பங்களுடன் கூடிய மொபைல் ஃபோன்கள் சந்தையில் இடம் பெற்று வருகின்றன. மொபைல் ஸ்டோரேஜ், சார்ஜிங் குவாலிட்டி என பல தேவைகல் இருந்தாலும் இந்த கேமராவிற்கான மவுஸ் என்பது அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. மொபைல் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் பல பேரின் முதல் கேள்வி கேமரா குவாலிட்டி என்ன என்பதாகவே உள்ளது. அந்த அளவு மக்கள் மத்தியில் புகைப்படம் வீடியோ எடுப்பதற்கான மோகம் அதிகரித்து விட்டது. அந்த வகையில் ஜூமிங் ஃபியேட்சரில் கலக்கும் டாப் 6 மொபைல்களின் பட்டியல் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

  கேலக்ஸி எஸ் 23அல்ட்ரா (Galaxy S23 Ultra) : சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஜூம் புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த போனாக உள்ளது. இதில் 200MP சென்சார் கொண்டுள்ளது. அதன் 100x ஜூம் திறன்கள் பெரும்பாலும் டிஜிட்டலாக இருக்கும். ஜூமிங்கிற்காக பிரத்யேகமாக 3x மற்றும் 10x டெலிஃபோட்டோ லென்ஸ்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளன. இந்த போனின் விலை ரூ.1,24,999 ஆக சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரிவ்யூ அடிப்படையில் இந்த போன் ஜூம்மிங்கில் துல்லியமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

  கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா (Galaxy S22 Ultra) : கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் முந்தைய பதிப்பாகும். இந்த போனும் சிறந்த போட்டோ ஜூமிங் அம்சத்தை வழங்குகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் 108MP முதன்மை சென்சாரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 12MP அல்ட்ராவைடு மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ லென்ஸ்கள் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. 3x மற்றும் 10x லென்ஸ்கள் நன்கு வேலை செய்கின்றன. இந்த மொபைல் சந்தையில் ரூ.94,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

  ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) : ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மொபைலின் பின்புறத்தில் நான்கு கேமரா சென்சார்களைக் கொண்டுள்ளது. அந்த தடிமனான கேமரா தொகுதியில் 48MP முதன்மை கேமரா, 12MP அல்ட்ராவைடு, 12MP 2x டெலிஃபோட்டோ மற்றும் 12MP 3x டெலிஃபோட்டோ லென்ஸ்கள் கொண்டுள்ளன. ஃபோன் 6x ஆப்டிகல் ஜூம் வரம்பை வழங்குகிறது, டிஜிட்டல் ஜூம் 15x ஆக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

  விவோ எக்ஸ்80 ப்ரோ (Vivo X80 Pro) : Vivo X80 Pro ஒரு கேமரா சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் ஆகும். எல்லா வகையான போட்டோகிராபிக்கும் தகுந்தாற்போல் லென்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. 50எம்பி சாம்சங் ஜிஎன்வி பிரைமரி, சோனி ஐஎம்எக்ஸ்598 சென்சார் கொண்ட 48எம்பி அல்ட்ராவைடு, ஐஎம்எக்ஸ்663 உடன் 12எம்பி 2எக்ஸ் போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் ஜூம் செய்ய உதவும் 8எம்பி சென்சார் (5x ஆப்டிகல்) இந்த போனில் கொடுக்கப்பட்டு உள்ளது. Galaxy S22 Ultra வழங்கும் 10x ஆப்டிகல் ஜூம் உடன் ஒப்பிடும்போது இந்த போன் குறைவான திறன் கொண்டிருந்தாலும் 60x டிஜிட்டல் முறையில் பயன்படுத்த முடியும்.

  MORE
  GALLERIES

 • 67

  கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

  ஒன் ப்ளஸ் 10 ப்ரோ (one plus 10 pro ) : புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11 ஃபோனில் 2x ஆப்டிகல் ஜூமிங்கை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் OnePlus 10 Pro 3.3x ஜூம் செய்யும் திறன்களுடன் வழங்குகிறது. இந்த போன் 48MP பிரதான கேமரா, 50MP அல்ட்ராவைட் மற்றும் 8MP 3.3x ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  கேமரா ஜூமிங்கில் இந்த போன்களை அடிச்சுக்க முடியாது..! க்ளாரிட்டியில் அள்ளும் டாப் - 5 ஸ்மார்ட் போன்கள்

  பிக்சல் 7 ப்ரோ (pixel 7 pro) : பிக்சல் 7 ப்ரோவில் 50 எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி அல்ட்ராவைடு, 48 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ்கள் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் உடன் வழங்குகிறது.

  MORE
  GALLERIES