நடப்பாண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறை பல புதிய வாகன அறிமுகங்களை உள்ளடக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாகன அறிமுகங்களில் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட அனைத்து செக்மென்ட்களையும் உள்ளடக்கியது. அந்த வகையில் இந்த 2022-ஆம் ஆண்டு பல பிரீமியம் பைக்குகள் இந்தியாவில் வெளியிட பல முன்னணி நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
2022-ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் சில பிரீமியம் பைக்குகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம். இவற்றில் சில பைக்குகள் அவற்றின் ஸ்பை ஷாட்கள் மற்றும் அறிமுகத்திற்கு முன்னதாகவே லீக்கான ஸ்பெசிஃபிகேஷன்களுக்காக சில மாதங்களாக பேசப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் பார்த்தால் புதிதாக அறிமுகமாகும் பிரீமியம் பைக்குகளுக்காக காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் வரவிருக்கும் பைக்குகளின் அறிமுகத்துடன் பல புதிய விருப்பங்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411): ஸ்க்ராம் 411 பைக் என்பது ஹிமாலயன் பைக்கை பேஸாக கொண்ட ராயல் என்ஃபீல்டில் இருந்து வரவிருக்கும் ஸ்க்ராம்ப்ளர் மாடல் ஆகும். லீக்காகியுள்ள தகவலின் அடிப்படையில், வர உள்ள ஸ்க்ராம் 411 பைக்கானது, வடிவமைப்பில் ஹிமாலயன் பைக்குடன் பல ஒற்றுமைகளை கொண்டிருக்கும். அதே நேரத்தில் அதன் தனித்துவத்தை பெற்றிருக்கும் என்றும் தெரிகிறது. இந்த பைக் இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350): ராயல் என்ஃபீல்டு ஹண்டர் பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அநேகமாக ஸ்க்ராம் 411 அறிமுகத்திற்கு பின் அடுத்ததாக ஹண்டர் 350-ன் அறிமுகம் இருக்கலாம். இந்த பைக் ஒருபக்கம் ஆஃப்-ரோடர் போலிருந்தாலும், இது ஒரு ஸ்கிராம்பிளராகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ராயல் என்ஃபீல்டின் Meteor 350 பைக்கை ஒத்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 கேடிஎம் ஆர்சி390 (2022 KTM RC390): KTM RC 390 பைக் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இது RC நேம்டேக்கை முன்னோக்கி கொண்டு செல்கிறது. ஏனென்றால் இந்த பைக் தற்போதைய RC200-ன் அப்டேட்டட் மற்றும் பவர்ஃபுல் வெர்ஷனாக இருக்கும். மேலும் இந்த பைக் நவீனமயமாக்கப்பட்ட தோற்றத்துடன் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 கேடிஎம் 390 அட்வென்ச்சர் (2022 KTM 390 Adventure): KTM 390 அட்வென்ச்சர் RC390-க்கு முன்பெ அறிமுகம் ஆகலாம். இதன் வடிவமைப்பு மற்றும் வண்ணத்தில் புதிய அப்டேட்ஸ்களை பெறலாம். புதிய 2022 390 அட்வென்ச்சர் தொடர்ந்து 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் 9,000ஆர்பிஎம்மில் 42.3பிஎச்பி பவரையும், 7,000ஆர்பிஎம்மில் 37என்எம் ஆற்றலையும் வெளிப்படுத்தும் என தெரிகிறது.