முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

Maruti Suzuki: இந்த ஆண்டில் அறிமுகமாகவுள்ள மாருதி சுசுகி கார்களின் முழு விவரம்..

  • 17

    மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

    இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி. இதன் கைவசம் இன்னும் 2.7 லட்சம் ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. 2025ம் ஆண்டின் பிற்பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், தற்போது CNG வாகனங்களில் கவனம் செலுத்துவதாக ஏற்கனவே மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 கார்கள் பற்றி விவரங்கள் இதோ...

    MORE
    GALLERIES

  • 27

    மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

    1. மாருதி சுஸுகி XL6 ஃபேஸ்லிஃப்ட் :  இந்திய சந்தையில் பலேனோ (Baleno) மற்றும் டிசையர் சிஎன்ஜி (Dzire CNG) ஆகிய கார்களின் வெற்றிகரமான விற்பனையை தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனம் எம்பிவி காரான எக்ஸ்எல் 6 ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 என இரண்டு எம்பிவி மாடல் கார்களிலும் காஸ்மெட்டிக்கில் மாற்றங்களைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு எம்பிவி-க்களிலும் 103 பிஎச்பி மற்றும் 138 எம்.என். உற்பத்தி திறன் கொண்ட1.5 லிட்டர் K12C பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், அது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

    2. மாருதி சுசுகி பலேனோ சிஎன்ஜி: மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் பலேனோவின் சிஎன்ஜி வெர்ஷனையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தனது போட்டியாளரான டொயோட்டா ஏற்கனவே Glanza இன் CNG பதிப்பை அறிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பலேனோவின் சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுசுகி வெளியிட உள்ளது. காஸ்மெட்டிக்கைப் பொறுத்தவரை எவ்வித மாற்றங்களும் இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிஎன்ஜி அமைப்பிற்கு இடமளிக்கும் வகையில் பலேனோ சிஎன்ஜி சிறிய அல்லது பூட் ஸ்பேஸ் இல்லாமல் வரும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் நிலவி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

    3. மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா: மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்வியூ ஆன விட்டாரா பிரெஸ்லாவை வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புது வெர்ஷனில் விட்டாரா பிரெஸ்லா புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

    வெளிப்புறத்தில், நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், உள்புறத்தில், காரின் புதிய ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் கிடைக்கும் என்றும் தெரிகிறது. புதிய 1.5 லிட்டர் K12C இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்வியூ இயக்கப்பட உள்ளது. இது தவிர, எலக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், எஸ்ஓஎஸ் செயல்பாடு, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் பல புதிய அம்சங்களுடன் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

    4. மாருதி சுசுகி மிட்-சைஸ் எஸ்யூவி: ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் பிற மாடல்களை எதிர்கொள்ளும் புதிய நடுத்தர அளவிலான எஸ்யூவியை டொயோட்டாவுடன் இணைந்து மாருதி சுஸுகி உருவாக்கி வருவதாக எவ்வித செய்தியும் இல்லை, ஆனால் டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி இரண்டும் புதிய கார் தயாரிக்கும் சோதனையில் ஒன்றாக களமிறங்கியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மிட் சைஸ் எஸ்யூவி டொயோட்டாவின் DNGA பிளாட்பார்மை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.5-லிட்டர் K12C இன்ஜின் மூலம் இயக்கப்படலாம் என்றாலும், உற்பத்தி நிறுவனம் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் திறனை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

    5. மாருதி சுசுகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட்: மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறைக்கு தேவையான ஆல்டோ 800 மாடல் கார்களை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. சோதனையின் போது இந்த காரின் தோற்றம் வெளியானது. அதில்,12 இஞ்ச் ஸ்டீல் சக்கரங்கள் கொண்ட புதிய ஆல்டோ காரின் முன்புறத்தில் கிரில் அமைப்பு உள்ளது. மேலும் பம்பரிலும் சில வடிவமைப்பு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் சில டிசைன்கள் மட்டும் மாருதி 800 வெர்ஷனில் இருந்து உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.

    MORE
    GALLERIES