சர்வதேச சந்தையோடு ஒப்பிடும் போது இந்தியாவின் வாகனச் சந்தை மிகப் பெரிய ஒன்று. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு கூடடிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அண்மைக் காலமாக பைக்குகளுக்கு இணையாக ஸ்கூட்டர்களின் விருப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் அனைத்து முன்னனி இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களும் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். நகர்ப்பகுதிகளில் ஓட்டுவதற்கு எளிதானது, பொருட்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடிகிறது, பெண்களால் எளிதில் கையாள முடிகிறது உள்ளிட்ட பல காரணங்களால் இந்திய வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை விரும்புகிறார்கள்.
SIAM எனப்படும் சௌத் இண்டியன் ஆட்டோமொபைல் அசோஷியேசன் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 2022ஆம் நிதியாண்டின் முதல் அரை ஆண்டில் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 41 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. எனவே தான் முன்னனி இரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்கள் பல்வேறு மாடல்களில் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அநத வகையில் 2022ஆம் ஆண்டு நிறைவடைய உளள நிலையில் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான ஐந்து ஸ்கூட்டர்கள் பற்றி பார்க்கலாம்.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் : ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான். நவம்பர் மாதம் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரத்து 84 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் ஆகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான ஆக்டிவா எண்ணிக்யை விட கிட்டத்தட்ட இந்த ஆண்டு 50 ஆயிரம் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
சுசுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் : ஸ்கூட்டர்கள் விற்பனையில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது சுசுகி ஆக்செஸ் ஸ்கூட்டர்கள். கடந்த ஆண்டு டிவிஎஸ் நிறுவனத் தயாரிப்பான ஜூபிடர் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை ஆக்செஸ் பிடித்துள்ளது. நவம்பர் மாதம் மட்டும் இந்தியா முழுவதும் 48ஆயிரத்து 113 ஆக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 42,481 ஆக்செஸ் ஸ்கூடட்ர்கள் விற்பனையாகியுள்ளன.
நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர்களும், டிவிஎஸ் நிறுவனத்தின் NTorq ஸ்கூட்டர்களும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர் இந்த ஆண்டு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரத்துக்கொண்டே வரும் என்பதுதான் நிபுணர்களின் கருத்து