முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக, அதிக அம்சங்கள் நிறைந்த 5 ஸ்கூட்டர்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

 • 16

  பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

    நாட்டில் ஸ்கூட்டர்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது, குறிப்பாக நவீன அம்சங்களுடன் வரும் ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. புதிய தலைமுறை ஸ்கூட்டர்கள் டிஜிட்டல் ஸ்கிரீன், ஸ்பீக்கர், ரைடிங் மோட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகின்றன. ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் சிறப்பம்சங்கள் நிறைந்த 5 ஸ்கூட்டர்கள் குறிந்து தெரிந்துகொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

  டிவிஎஸ் ஜூபிடர் : TVS Moto நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று தான் இந்த TVS Jupiter. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், எக்ஸ்டர்னால் ஃப்யூயல்-ஃபில்லர் , எஞ்சின் கில் ஸ்விட்ச், ஆல் இன் ஒன் லாக், ஐடச் ஸ்டார்ட், ஆப்ஷனல் மொபைல் சார்ஜர், டூயல்-சைட் ஹேண்டில் லாக், அட்ஐஸ்ட்டபில் விண்ட் ஸ்கிரீன் மற்றும் கேஸ் சார்ஜ்ட் செய்யப்பட்ட ரியர் சஸ்பென்ஷன் போன்ற பல அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் வருகிறது. இந்த ஸ்கூட்டரின் ஒருசில வேரியன்ட்டில் டியூப்லெஸ் டயர்ஸ், அலாய் வீல்ஸ் மற்றும் SmartXonnect (ப்ளூடூத் பேரிங்) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. TVS Jupiter-ன் விலை ரூ.71,390 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் தொடங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

  ஓலா எஸ் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் : Ola S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பல அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல டெக்னலாஜி அம்சங்களை கொண்டுள்ளது. 3GB ரேம் மற்றும் வேகமான ப்ராசஸருடன் கூடிய 7-இன்ச் டச் கஸ்டமைஸ் டேஷ்போர்டு, ஜியோ-ஃபென்சிங், மேப் நேவிகேஷன்ஸ் மற்றும் ஜிபிஎஸ், ப்ளூடூத், வைஃபை, இன்டர்நெட் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் மோட் உள்ளிட்ட பல ரைடிங் மோட்ஸ், ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.99,827 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

  யமஹா ரே-ZR 125 ஹைபிரிட் : யமஹா மோட்டார் இந்தியாவின் இந்த ஹைப்ரிட் ஸ்கூட்டரில் வழக்கமான தனிகான்வென்ஷ்னல் எலெக்ட்ரிக் ஸ்டார்டர் தேவையில்லாமல் ஒரு அமைதியான எஞ்சின் ஸ்டார்ட்டிற்காக “ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG)” பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று SMG ஆன்போர்டு பேட்டரியை சார்ஜ் செய்கிறது. எஞ்சினுடன் SMG-ஆனது 6.0kW (8.2bhp) மற்றும் 10.3 Nm டார்க் வரை உற்பத்தி செய்கிறது. யமஹாவின் கூற்றுப்படி ஸ்கூட்டரை ஸ்டாப் கண்டிஷனில் இருந்து ஸ்டார்ட் செய்யும் போது விரைவான ஆக்ஸலரேஷனுக்கு இது உதவுகிறது. மற்ற அம்சங்களில் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப், பாஸ் சுவிட்ச், டூ-லெவல் சுவிட்ச், ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக், எல்இடி பொஷிஷன் லைட், எல்இடி ஹெட் லைட் உள்ளிட்ட பல அடக்கம். இந்தியாவில் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.83,730-லிருந்து (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) தொடங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

  ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட் : ஹோண்டா ஆக்டிவா இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. இந்நிலையில் புதிய ஆக்டிவா எச்-ஸ்மார்ட் மாடலை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. இது  பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டரை பயன்படுத்த விரும்பும் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. Activa H-Smart கீலெஸ் அணுகலுக்கான ஸ்மார்ட் ரிமோட் கீயுடன் வருகிறது. மேலும் இந்த கீ-யை யூஸர்கள் Smart Find, Smart Unlock மற்றும் Smart Safe போன்ற பல செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். இந்த ஸ்கூட்டர் Smart Engine Immobilizer வருகிறது, இது ஸ்கூட்டரை திருட்டிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட்டின் விலை ரூ.80,537-லிருந்து (எக்ஸ்-ஷோரூம்) துவங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  பட்ஜெட் விலையில் 5 சூப்பர் ஸ்கூட்டர்கள்... இத்தனை சிறப்பம்சங்களா...? விவரம் தெரிஞ்சிக்கோங்க..!

  ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 : Hero Maestro Edge 125 ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களில் ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக், டைமண்ட் கட் அலாய் வீல்ஸ், சைட் ஸ்டாண்ட் எஞ்சின் கட் ஆஃப், ஃபுல் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்ஸ், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் கனெக்ஷன் உள்ளிட்டவை அடக்கம். இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,356 முதல் தொடங்குகிறது.

  MORE
  GALLERIES