ஏர்பஸ் ஏ380 - 800 : ஏர்பஸ் ஏ380 - 800 விமானத்தில் உள்ள சிங்கிள் கிளாஸ் மூலமாக 853 பயணிகள் வரையில் பயணம் செய்யலாம். டூ-டயர்டு கிளாஸ் மூலமாக 644 பயணிகள் வரை பயணம் செய்யலாம். இந்த விமானம் முதன் முதலாக 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வானில் பறக்கத் தொடங்கியது. இதே ரகத்தில் 254 விமானங்களை ஏர்பஸ் தயாரித்துள்ளது. இந்த விமானங்களின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்துவிட்டது. ஆனாலும் இந்த நிறுவனத்தின் விமானங்கள் தற்போது வரையிலும் பிரிட்டீஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படுகின்றன.
போயிங் 747-8 : சிங்கிள் கிளாஸ் சிஸ்டம் மூலமாக இந்த விமானத்தில் 700 பயணிகள் பயணம் செய்யலாம். இந்த நிறுவனத்தில் இருந்து முதலாவது விமானத்தை லுஃப்தாஸனா நிறுவனம் இயக்கியது. இந்த விமானம் 14 ஆயிரத்து 816 கி.மீ. தொலைவுக்கு இடைவிடாமல் பறந்து செல்லக் கூடியது ஆகும். ஏர் ஃபோர்ஸ் விமான சேவை நிறுவனம் இந்த போயிங் விமானத்திற்கு ஆர்டர் செய்துள்ளது. 2024ஆம் ஆண்டில் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போயிங் 747-400 : போயிங் 747 ரகத்தில் மற்றொரு பெரிய விமானம் இது. இதன் சிங்கிள் சீட்டிங் சிஸ்டம் மூலமாக 660 பயணிகள் பயணிக்கலாம். ஆனால், இந்த விமானம் பெரும்பாலும் தற்போது சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1988ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் 13,446 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்யக்கூடியது.