முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான தேவையும் விருப்பமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்பதை உயர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன விற்பனை உறுதி செய்துள்ளது.

  • News18
  • 16

    விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

    2022ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை படு ஜோராக இருந்தது. வாகனச் சந்தையிலேயே பெரும் எலெக்ட்ரிக் வாகன புரட்சியைத் துவங்கிய ஆண்டு 2022ம் ஆண்டு தான். அதே வளர்ச்சி இந்த 2023ம் ஆண்டும் தொடர்கிறது. 2023ம் ஆண்டு முதல் மாதமான ஜனவரி மாதம் எலெகட்ரிக் டூவீலர் விற்பனை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 பிராண்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

    இந்த பட்டியலில் 10வது இடத்தை பிஜிஅவுஸ் ஆட்டோ நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 698 வாகனங்களைக் கடந்த ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. 9வது இடத்தை கைனடிக் கிரீன் நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 984 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 8வது இடத்தில் ஓகாயா இவி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1208 வாகனங்களைக் கடந்த ஜனவரி மாதம் செய்துள்ளது. 7வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 2564 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் வெறும் 612 வானகங்களைத் தான் விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 319 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது

    MORE
    GALLERIES

  • 36

    விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

    6வது இடத்தில் ஆம்பியர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் இந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 4120 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மொத்தம் 4367 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 6 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். 5வது இடத்தில் ஓகினவா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் 4238 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் 5615 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 25 சதவீத வீழ்ச்சியாகும்.

    MORE
    GALLERIES

  • 46

    விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

    இந்த பட்டியலில் 4வது இடத்தை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 6266 வாகனங்களைக் இந்த ஆண்டு ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் மொத்தம் 8153 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது 23 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்தாண்டு ஜனவரி விற்பனை பட்டியலில் முதலிடத்திலிருந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

    இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்நிறுவனம் 2023- ஜனவரி மாதம் மொத்தம் 8687 வானங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் மொத்தமே 1881 வாகனங்களைத் தான் விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 362 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2வது இடத்தை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் படித்துள்ளது. இந்நிறுவனம் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த ஜனவரி மாதம் மொத்தம் 9916 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரியில் வெறும் 1157 ஸ்கூட்டர்கள் தான் விற்பனையாகியிருந்தன. இது 757 சதவீத வளர்ச்சியாகும்.

    MORE
    GALLERIES

  • 66

    விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. விற்பனையில் டாப் 10 இவை தான்

    முதலிடத்தை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 17,474 ஸ்கூட்டர்களை இந்த  ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் 1106 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 1480 சதவீத வளர்ச்சியாகும். ஓலா நிறுவனம் ஒரே ஆண்டில் இமாலய வளர்ச்சியைப் பெற்று அசைக்க முடியாத இடத்திற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES