இந்திய இரு சக்கர வாகன சந்தையைப் பொருத்தவரை அதிகம் மைலேஜ் தரும் பைக்குகள் தான் வெற்றியடைகின்றன. சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பைக்குகள் வாங்குகின்றனர். எனவே இரு சக்கர வாகனத்தை பொருத்தவரை ஸ்டைல், லுக், திறன் இவையெல்லாவற்றையும் விட விலை மற்றும் மைலேஜ் தான் ஒரு பைக்கின் சந்தை வெற்றியை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு அதிக மைலேஜ் தரும் பைக்குகள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் வாகனங்களே முன்னனியில் இருக்கின்றன. அது குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
டிவிஎஸ் ரைடர் : இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக பட்சமாக 60 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ரூ.85,400 விலைக்கு கிடைக்கும் இந்த பைக், 124.8 சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வருகிறது. நேவிகேசன் வசதி, வாய்ஸ் அசிஸ்ட், மெசேஜ் மற்றும் கால் இன்கமிங் நோடிவிகேசன், யுஎஸ்பி சார்ஜர் என நவீன வசதிகளுடன் அசத்தலான லுக்குடன் வெளியாகிறது இந்த பைக்.
ஹீரோ ஸ்பௌண்டர் : பெரும்பாலான பட்ஜெட் பைக் பிரியர்களின் விருப்பத் தேர்வு இந்த ஸ்பிளண்டர் பைக். ஹோண்டா நிறுவனமும் ஹீரோ நிறுவனமும் இணைந்திருந்த போது வெளியான இந்த மாடல் இந்தியாவின் வெற்றிகரமான பட்ஜெட் பைக். இப்போதும் அப்படித்தான். 60 கிலோமீட்டர் மைலேஜ் தரும் இ்நத பைக்குகள் 72, 728 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. தொடக்கத்தில் இருந்தே மாறாத ஸ்டைல் அன்ட் லுக் இந்த பைக்கின் சிறப்பம்சம். 97.2 சிசி திறன் கொண்ட எஞ்சின் கொண்ட இந்த பைக் செல்ஃப் ஸ்டார்ட்டருடன் கிடைக்கிறது.
டிஎவிஎஸ் ரேடியோன் : செம ஸ்டைல் லுக்குடன் இந்த பைக் வெளிவருகிறது. எஞ்சின் பீட் சத்தம் இந்த பைக்கின் சிறப்பம்சம் என்றெ சொல்லலாம். 110 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை 70,812. சை்ட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங், உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கும் இந்த பைக்கின் மைலேஜ் 65 கிலோமீட்டர்களாகும்.
பஜாஜ் பிளாட்டினா : 115 சிசி திறன் கொண்ட இந்த பைக் 70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்கிறார்கள்.3 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.69,212. டியூபளஸ் டயர்களுடன் 7 வண்ணங்களில் இந்த பைக்குகள் கிடைக்கின்றன.
அதோடு ஸ்டார்ட் சிட்டி பிளஸ்-68 கிலோமீட்டர், பஜாஜ் பிளாட்டினா 100சிசி 72 கிலோமீட்டர் மைலேஜ், என பட்டியல் வெளியாகியுள்ளது.