முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

அண்மையில் நடிகை மஞ்சு வாரியர் இருபத்து இரண்டு லட்சம் ரூபாய்க்கு பைக் வாங்கியது கவனம் பெற்றது. நம்மில் பலர் இதற்கு காரே வாங்கலாமே ஏன் பைக் வாங்குகிறார்கள் என்று சிந்திப்போம். ஆனால் கோடி கணக்கில் விலை நிர்ணயிக்கபட்ட பைக்குகளும் உள்ளன. இவற்றை சூப்பர் பைக்குகள் என்றழைக்கின்றனர்.

  • 110

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    உலகத்திலேயே மிக உயர்ந்த விலை கொண்ட சூப்பர் பைக் நெய்மர் மார்கஸ் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷனாக வெளியான ஃபைட்டர் பைக்குகள் தான். இதன் விலை 91 கோடி ரூபாய். மொத்தம் 45 பைக்குகள் மட்டுமே வெளியாகின. இவற்றின் வேகத்தைக் கேட்டால் தலைசுற்றும். ஆம் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை இவை.

    MORE
    GALLERIES

  • 210

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    அடுத்ததாக 1949ஆம் ஆண்டு வெளியீடான e90 ஏஜிஎஸ் போர்குபைன். இந்த வாகனம் மோட்டார் சைக்கிள் ரேசர் லெஸ்லி கிராகாமால் பயன்படுத்தப்பட்டது. இந்த 500 சிசி மோட்டார் பைக் பந்தயங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. மொத்தம் நான்கு பைக்குகள் தான் தயாரிக்கபட்டன. இதன் விலை 58 கோடி ரூபாய்.

    MORE
    GALLERIES

  • 310

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    ஆரஞ்சு நிறத்தில் பக்கா ஸ்போர்ட்ஸ் பைக்காக காட்சியளிக்கும் இகோஸ்ஸி ES1 SPIRIT-ன் விலை 29 கோடி ரூபாய். ஏரோடைனமிக் வடிவமைப்பு தான் இதன் சிறப்பம்சம். வெறும் 120 கிலோ மட்டுமே எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 370 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.

    MORE
    GALLERIES

  • 410

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    1894 ஆண்டு வெளிவந்த Hildebrand & wolfmuller தான் உலகின் முதல் மோட்டார் சைக்கிள். அதனால் இதன் விலை 28.96 கோடி ரூபாய். இதற்கு கிளட்ச்சோ, பெடலோ இல்லாத சூழலில், இதனை வேகமாக உந்தி தள்ளி தான் பயணத்தை தொடங்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 510

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    மிகவும் நகைச்சுவையாக காட்சியளிக்கும் BMS NEHMESIS பைக்கின் விலை 24.82 கோடி ரூபாய். ஒரு புறம் மட்டுமே இருக்ககூடிய swing arm rear suspension காரணமாக 10 இன்ச் வரைக்கும் பைக்கை தூக்கவும் முடியும், தரையில் கீழிறங்கவும் முடியும். இதில் 24 காரட் தங்கத்திலான சில பாகங்களும் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 610

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    Harley Davidson cosmic starship பைக்குகளும் விலையுயர்ந்த பைக்குகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதன் பெயிண்ட தான் பைக்கின் சிறப்பம்சம். இதன் விலை 12 கோடி ரூபாய்.

    MORE
    GALLERIES

  • 710

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    Dodge tomahawk v10 பைக்குகள் 2003 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில், சர்வதேச வாகனங்கள் கண்காட்சியில் அறிமுகபடுத்தபட்டது. இதன் விலை 4.55 கோடி ரூபாய். இந்த வாகனம் நகரங்களில் செல்ல அனுமதி கிடையாது. இதன் எடை 680 கிலோ.

    MORE
    GALLERIES

  • 810

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    ECOSSE FE TI XX TITANIUM SERIES பைக்குகள் விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்று. இதன்மதிப்பு 2.4 கோடி ரூபாய். 2409 cc billet aluminium engineயை கொண்டு இவை தயாரிக்கபட்டன.

    MORE
    GALLERIES

  • 910

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    DUCATI DESMOSEDICI D16RR NCR M16 பைக்குகள் தான் இந்த நிறுவனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த பைக்குகளாக சொல்லப்படுது. இதற்கு விலையுயர்ந்த பைக்குகள் பட்டியலில் 9வது இடம்.

    MORE
    GALLERIES

  • 1010

    உலகின் மிக விலை உயர்ந்த 10 பைக்குகள் என்னென்ன தெரியுமா..?

    பத்தாவது இடத்தை பிடித்திருப்பது DUCATTI TESTA STRETTA NCR MACCHIA NERA CONCEPT. இதன் விலை 1.9 கோடி ரூபாய்.

    MORE
    GALLERIES