முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

TATA Motors | இந்த ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தனது Tiago, Tigor, Nexon, Safari, Harrier மற்றும் Altroz தயாரிப்புகளுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்ஸ் உட்பட பல தள்ளுபடிகளை வழங்குகிறது.

  • 17

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 2022 மாதத்தில் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் அதிக தள்ளுபடியை வழங்குகிறது. டாடா நிறுவன கார்களை வாங்க ஆர்வமுடன் காத்திருப்போர் அதிகப்பட்சம் ரூ.70,000 வரை தள்ளுபடியுடன் புதிய டாடா கார்களை வாங்கலாம்.
    இந்த ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தனது Tiago, Tigor, Nexon, Safari, Harrier மற்றும் Altroz தயாரிப்புகளுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்ஸ் உட்பட பல தள்ளுபடிகள் மற்றும் பலன்களை வழங்குகிறது. இருப்பினும் டாடா பன்ச் காம்பாக்ட் எஸ்யூவி-க்கு தள்ளுபடி இல்லை.

    MORE
    GALLERIES

  • 27

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    டாடா ஹாரியர் (Tata Harrier):
    ஹாரியரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 14.65 லட்சம் முதல் ரூ. 21.95 லட்சம் ஆகும். அனைத்து டாடா கார்களை விட Harrier கார் அதிகபட்ச தள்ளுபடியைப் பெறுகிறது. இந்த பிரபல SUV மொத்தம் ரூ.70,000 வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. சிறப்பு சலுகைகளில் ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுண்ட்டும் அடங்கும். இந்த காருக்கு கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.5,000. எம்ப்ளாய் பெனி ஃபிட் ரூ.25,000 உள்ளிட்ட தள்ளுபடிகளும் அடங்கும். இருப்பினும், டாடா ஹாரியருக்கு கேஷ் டிஸ்கவுண்ட் எதுவும் இல்லை.

    MORE
    GALLERIES

  • 37

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    டாடா சஃபாரி (Tata Safari):
    டாடா சஃபாரியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.25 லட்சம் முதல் ரூ.23.46 லட்சம் வரை உள்ளது. ரூ.40,000 வரை தள்ளுபடியுடன் இந்த மாதம் டாடா சஃபாரி காரை வாங்கலாம். இந்த மாதத்திற்கான தள்ளுபடி சலுகையில் ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுண்ட் அடங்கும். இந்த பிரீமியம் எஸ்யூவி-க்கு கேஷ் அல்லது கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்கள் எதுவும் இல்லை.

    MORE
    GALLERIES

  • 47

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    டாடா நெக்ஸான் (Tata Nexon):
    டாடா நெக்ஸான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.55  லட்சம்  முதல் ரூ.13.90 லட்சம் வரை இருக்கிறது. டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் வேரியன்ட்களுக்கு ரூ.8,000 வரை மொத்த தள்ளுபடி கிடைக்கும். பெட்ரோல் வேரியன்ட்களுக்கு கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.3,000 மற்றும் பணியாளர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மறுபுறம் டீசல் வேரியன்ட்களுக்கு கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.5,000 மற்றும் பணியாளர்களுக்கு ரூ.10,000 என மொத்தம் ரூ.15,000 தள்ளுபடி கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 57

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    டாடா டிகோர் (Tata Tigor):
    டிகோர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 5.98 லட்சம் முதல் ரூ. 8.57 லட்சம் வரை உள்ளது. டாடாவின் ஸ்டைலிஷான செடான் டிகோர் ஜூலை 2022-ல் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுண்ட், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.3,000, ஊழியர்களுக்கான தள்ளுபடியில் ரூ 10,000 உள்ளிட்ட சலுகைகளை பெறுகிறது. XZ மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியன்ட்களில் டாடா வழங்கும் கேஷ் பெனிஃபிட் ரூ. 10,000 ஆகும். இருப்பினும் காரின் XE, XM, XT வேரியன்ட்களுக்கு இந்த மாதத்தில் கேஷ் டிஸ்கவுண்ட்ஸ் இல்லை.

    MORE
    GALLERIES

  • 67

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    டாடா டியாகோ (Tata Tiago):
    டாடா டியாகோவை வாங்குபவர்கள் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்டை பெறுவார்கள். ஊழியர்களுக்கான தள்ளுபடியில் டாடா டியாகோவிற்கு 5,000 ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. XZ மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியன்ட்களுக்கு வழங்கப்படும் கேஷ் பெனிஃபிட் ரூ. 10,000 ஆகும்.

    MORE
    GALLERIES

  • 77

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    டாடா அல்ட்ரோஸ் (Tata Altroz):
    Tata Altroz-ன் டீசல் மாடல்களுக்கு ரூ.10,000 வரை மொத்த தள்ளுபடியும், பெட்ரோல் மாடல்களுக்கு மொத்தம் ரூ.7,500 தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.38 லட்சம் முதல் ரூ.7.80 லட்சம் வரை உள்ளது.

    MORE
    GALLERIES