முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » அதிகரித்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

அதிகரித்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது.

  • 15

    அதிகரித்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

    சைக்கிள், பைக், ஸ்கூட்டர் வைத்திருக்கும் அனைவரின் அடுத்தக் கனவு எப்படியாவது கார் ஒன்று வாங்கி விட வேண்டும் என்பது தான். இதற்காகவே அனைத்து தரப்பட்ட மக்களுக்கு ஏற்றவகையில் ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய வடிவிலானக் கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்றின் காரணமாக கார்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களின் விலை உயர்வால் கார்களின் விலையும் அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    அதிகரித்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

    இந்நிலையில் தான் கார் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் டாடா நெக்ஸான், ஹாரியர், சஃபாரி மற்றும் பஞ்ச் போன்ற பல்வேறு மாடல் கார்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஒழுங்குமுறை மாற்றங்களால் வாகனங்களைத் தயாரிப்பதற்கான உள்ளீடு செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், எஸ்.யூ. வி கார்கள் அதன் மாடலைப் பொறுத்து சராசரி விலை உயர்வு என்பது 1.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    அதிகரித்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

    அதன் படி டாடா நெக்சன் EV மாடலின் விலை ரூ. 31 ஆயிரமும், டாடா நெக்சான் மேக்ஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 85 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸின் கூற்றுப்படி, ஒட்டுமொத்த உள்ளீடு செலவு அதிகரிப்பு விலை உயர்வுக்குக் காரணம். ஜனவரியில், வாகன உற்பத்தியாளர் வணிக வாகனங்களின் விலையை 2% வரை உயர்த்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    அதிகரித்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

    தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா நெக்சான், டாடா சஃபாரி, டாடா பன்ச், டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ரோஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற பல விதமான மாடல்களை ஐசி என்ஜின் பிரிவில் விற்பனை செய்துவருகிறது.சமீபத்தில் டாடா நெக்சான் EV சீரிஸ் விலையை டாடா மோட்டார்ஸ் மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 55

    அதிகரித்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

    முன்னதாக இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளருமான மாருதி சுஸுகி, இதேபோன்ற விலை அழுத்தங்களைக் குற்றம் சாட்டி, அதன் மாடல்களில் சராசரியாக 1.1% விலையை உயர்த்தியது. இதோடு இந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து வாகன உற்பத்தியாளர்கள் கடுமையான எரிபொருள் திறன் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமீபத்தில், மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. கார் தயாரிப்பாளர் எஸ்யூவியின் விலையை ₹85,000 வரையும், ஸ்கார்பியோ-என் விலையை ₹1 லட்சம் வரையும் உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES