முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

சுஸுகி அக்செஸ் 125 ரூ. 79,400 என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 89,500 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரைடு கனெக்ட் எடிசன் கொண்ட சுஸுகி அக்செஸ் மட்டும் கொஞ்சம் அதிக விலையைக் கொண்டதாக உள்ளது. செய்தியாளர் : ரொசாரியோ ராய்

  • 16

    இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

    முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸூகி இந்திய வாகன சந்தையில் மூன்று மாடல் ஸ்கூட்டர்களை தயாரித்து வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. ஆக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மென் என மூன்று மாடல் ஸ்கூட்டர்களையும் தற்போது அப்டேட் செய்திருக்கிறது சுஸூகி நிறுவனம். விரைவில் நாட்டில் புதிய OBD 2 என்கிற மாசு உமிழ்வு விதியை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த புதிய சுற்றுச்சூழல் விதிக்கு உடன்படும் விதமான தொழில்நுட்பங்களோடு இந்த மூன்று ஸ்கூட்டர் மாடல்களும் தற்போது அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

    இதுதவிர, இ20 ரக எரிபொருளிலும் இயங்கக் கூடிய வாகனங்களாகவும் இவை அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றன. 20 சதவீதம் எத்தனால் 80 சதவீதம் பெட்ரோல் எனும் கலவையைக் கொண்ட எரிபொருளிலேயே இவை இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. காற்று மாசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இ20 ரக எரிபொருள் விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

    அதற்கு முன்னதாகவே சுஸூகி தயாராகிவிட்டது. ஸ்கூட்டர்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்ற நிலையிலும், அவற்றின் விலையில்  பெரியதாக மாற்றம் செய்யப்படவில்லை. சுஸூகி அக்செஸ் 125 ரூ. 79,400 என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 89,500 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரைடு கனெக்ட் எடிசன் கொண்ட சுஸூகி அக்செஸ் மட்டும் கொஞ்சம் அதிக விலையைக் கொண்டதாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

    அப்டேட்டின் காரணமாக சுஸூகி அவெனிஸ் மாடலின் விலை சற்று உயர்ந்திருக்கின்றது. ரூ. 92 ஆயிரம் தொடங்கி ரூ. 92,300 வரையிலான விலையில் இது விற்கப்பட்டு வருகின்றது. சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ரூ. 93 ஆயிரம் தொடங்கி ரூ. 97 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இந்த விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள். அப்டேட்டின் கீழ் புதிய வண்ணங்களையும் சுஸுகி ஸ்கூட்டர்களில் சேர்த்து இருக்கின்றது.

    MORE
    GALLERIES

  • 56

    இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

    அந்தவகையில், அவெனிஸ் மாடலில் புதிதாக மெட்டாலிக் சோனிக் சில்வர்/ மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ ஆகிய நிறங்களில் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதே போல் பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலில் பியர் மேட் ஷேடோ கிரீன் ஷேட் ஆகிய நிறங்களும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. சுஸுகி நிறுவனம் ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து தனது ஒட்டுமொத்த தயாரிப்பையும் ஓபிடி2-ஏ விதி மற்றும் இ20 பெட்ரோலில் இயங்கும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டதாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    இ-20 பெட்ரோல் எஞ்சினுடன் சுஸூகி ஸ்கூட்டர்கள் தயார்..! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

    சுஸூகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் உருவத்திலும், சிறப்பு வசதிகளிலும் கொஞ்சம் வேறுபட்டு இருக்கின்றன. ஆனால், இவை எஞ்ஜின் விஷயத்தில் ஒரே மாதிரியானவை தான். குறிப்பாக, அக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஆகிய மாடல்களில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஃப்யூவல் இன்ஜெக்ட் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES