48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 17 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய வரி விதிப்பு ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால் பல பொருட்களின் வரியை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டள்ளது. குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் எஸ்யுவி ரக கார்களுக்கான வரி குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களுக்கான வரையறை இதுவரை உருவாக்கப்படவில்லை. தற்போது இதற்கான வரையறையை ஜிஎஸ்டி கவுன்சில் வகுத்துள்ளது. அதாவது 1,500 சிசி திறனுடன், 4,000 மில்லிமீட்டர் நீளம் கொண்ட கார்கள் தான் இனி எஸ்யுவி ரகமாக வகைப்படுத்தப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஆனால், தற்போது உற்பத்தி செய்யப்பட்டு எஸ்யுவி காராக வகைப்படுத்தப்பட்டுள்ள எந் காரும் 4,000 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கவில்லை.
பெரும்பாலான கார்களிள் நீளம் 3,999மில்லி மீட்டருக்குள் தான் இருக்கின்றன. இதனால் அந்த கார்களும் எஸ்யுவியாக வகைப்படுத்தப்பட்டு அதற்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டியும், 22 விழுக்காடு செஸ்-சும் விதிக்கப்படுகிறது. இதனால் 50 விழக்காடு வரி விதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய விதியின் படி இனி இந்த கார்கள் எஸ்யுவி வகைக்குள் வராது. அதனால் 50 விழுக்காடு வரி விதிக்கப்படாது. அதனால் வரியும் கனிசமாக குறையும். எனவே தற்போதுள்ள எஸ்யுவி ரக கார்களின் விலையும் கனிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதோடு, எஸ்யுவி ரக கார்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான விரி விதிப்பு முறையை ஜிஎஸ்டி கவுன்சில் அமல்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் எஸ்யுவி ரக கார்களுக்கான முறையான வரையறை இல்லாததால் தயாரிப்பாளர்களும் குழப்பத்தில் இருந்து பவந்தனர். தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் எஸ்யுவி ரக கார்களுக்கான வரையறையை வகுத்துள்ளது. அதன்படி தயாரிப்பாளர்கள் எஸ்யுவி ரக கார்களை இனி வகைப்படுத்தி தயாரிக்க முடியும்.
மேலும், அதிகப்படியான வரி செலுத்துவதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கும் விடுதலை. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவால் இனி இந்தியாவில் எஸ்யுவி ரக கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. எம்யுவி கார்களுக்கும் இது வரை முறையான வரையறை இல்லை. எனவே மொபைல் யுட்டிலிட்டி வெகிகிள் எனப்படும் எம்யுவி கார்களுக்கும் இது போன்ற வரையறையை ஜிஎஸ்டி கவுன்சில் வகுக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.