முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » 3 எலெக்டிரிக் கார்களை அறிமுகம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்!

3 எலெக்டிரிக் கார்களை அறிமுகம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்!

Mercedes benz | வாடிக்கையாளர்களின் நலன் கருதி நாடு முழுவதிலும் 140 இடங்களில் பொது சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவுவதற்கு மெர்சிடஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

  • 15

    3 எலெக்டிரிக் கார்களை அறிமுகம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்!

    உயர் ரக கார்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் தான் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் இலக்கு. இவர்களது கார்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை என்று கூறப்பட்டாலும், அதற்கு ஏற்ற தரம், பாதுகாப்பு வசதிகள், சொகுசு அம்சங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.இத்தகைய சூழலில் மக்கள் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இப்படியொரு நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்பும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 25

    3 எலெக்டிரிக் கார்களை அறிமுகம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்!

    மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் ஏற்கனவே சில எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்றாலும் கூட, சந்தையில் தனக்கு போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்களின் சார்பில் கூடுதலான மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதை அந்நிறுவனம் கருத்தில் கொண்டுள்ளது. திறன் செயல்பாடு என்ற அடிப்படையில் மெர்சிடஸ் ஏஎம்ஜி ஈக்யூஎஸ் 53 என்ற மாடலை மெர்சிடஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்து வரக் கூடிய மாதங்களில் ஈக்யூஎஸ் செடான் மற்றும் ஈக்யூபி ஸ்போர்ட் யுடிலிட்டி போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    3 எலெக்டிரிக் கார்களை அறிமுகம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்!

    இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ஈக்யூஎஸ் செடான்
    மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் அடுத்த அறிமுகமாக ஈக்யூஎஸ் செடான் இருக்க போகிறது. இந்த காருக்கான உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் அசெம்பிள் செய்வதால் இறக்குமதி வரி குறையும் என்ற நிலையில், காரின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற எலெக்ட்ரிக் கார்களை பொருத்தவரையில் முழுவதுமாக இறக்குமதி கொள்கையை மெர்சிடஸ் பென்ஸ் கடைப்பிடிக்க உள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    3 எலெக்டிரிக் கார்களை அறிமுகம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்!

    விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்
    மெர்சிடஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் கார்களில் விலை குறைவானதாக இரண்டு மாடல்கள் இருக்கப் போகின்றன. அவை ஈக்யூஎஸ் மற்றும் 7 சீட்டர் ஈக்யூபி ஆகியவை ஆகும். இதுகுறித்து, மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மார்டின் சேவங்க் கூறுகையில், “எங்களது வாடிக்கையாளர்களுக்கு யதார்த்த விலையில் கட்டுப்படியாகும் வகையில் இந்த கார்கள் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆகவே இந்த கார்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 55

    3 எலெக்டிரிக் கார்களை அறிமுகம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்!

    மெர்சிடஸ் நிறுவனத்தின் முதலாவது எலெக்ட்ரிக் கார்
    இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் முதலாவது எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டில் மெர்சிடஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஈக்யூசி என்று பெயரிடப்பட்ட அந்தக் கார் தான் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகியுள்ள எலெக்ட்ரிக் கார் என்று மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி நாடு முழுவதிலும் 140 இடங்களில் பொது சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவுவதற்கு மெர்சிடஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

    MORE
    GALLERIES