முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ஓலா, ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • 16

  அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  நீண்ட மாதங்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Simple One-ஐ இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது Simple Energy நிறுவனம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சிங்கிள் வேரியன்ட் மற்றும் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. உண்மையில் Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்ஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே துவங்கி விட்டது. இருப்பினும், இந்த இ-ஸ்கூட்டரின் வெளியீடு பல காரணங்களால் தாமதமாகி கொண்டே சென்றது. இறுதியாக நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு சமீபத்தில் அறிமுகமாகி இருக்கிறது Simple One மின்சார ஸ்கூட்டர்.

  MORE
  GALLERIES

 • 26

  அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  எலெக்ட்ரிக் டூவீலர் ஸ்டார்ட்அப் நிறுவனமான Simple Energy தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Simple One-ஐ ரூ.1.45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிட்டத்தட்ட சுமார் 21 மாதங்களுக்கு பின் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இருப்பினும் 750W சார்ஜர் கொண்ட Simple One மாடல் ரூ.1.58 லட்சம் விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 36

  அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  இதனிடையே சமீபத்திய அறிவிப்பு ஒன்றில் சிம்பிள் எனர்ஜி நிறுவனமானது தனது Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரிகளை வரும் ஜூன் 6, 2023 முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றில் முதலில் பெங்களூரில் டெலிவரிகளை தொடங்கி படிப்படியாக நாடு முழுவதும் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக Simple Energy நிறுவனம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  Simple Energy-யின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் பேசுகையில், அடுத்த 12-18 மாதங்களில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறினார். Simple Energy நிறுவனம் ஏற்கனவே நம் தமிழகத்தின் சூளகிரியில் உற்பத்தி நிலையம் அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  தங்களது Simple One-க்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புக்கிங்ஸ்களை பெற்றுள்ளதாக கூறியிருக்கும் ராஜ்குமார், முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.1.10 லட்சம் விலையில் இருந்து ரூ.35,000 வரை ஸ்கூட்டரின் விலை அதிகரித்த போதிலும், வாடிக்கையாளர்கள் யாரும் புக்கிங்கை கேன்சல் செய்யவில்லை என்றும் கூறினார். எங்களின் Simple One ஸ்கூட்டருக்காக பொறுமையாக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி வழங்குவதே நிறுவனத்தின் தற்போதைய முன்னுரிமை என்றார்.

  MORE
  GALLERIES

 • 66

  அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. களமிறங்கும் ’சிம்பிள் ஒன்’.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5Kwh பேட்டரி பேக் மற்றும் 212 கிமீ ரேஞ்சை வழங்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் 0 - 40 கி மீ வேகத்தை வெறும் 2.77 வினாடிகளில் எட்டி விடும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஓலா, ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES