கார் வாங்க நினைத்து காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்டாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தனது புதிய மாடல் கார்களை சலுகை விலையில் அள்ளிச் செல்ல அழைப்பு விடுத்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி, சலுகை பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் எதுவும் மஹிந்திராவின் புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களான XUV700 மற்றும் தார், பொலிரோ நியோ உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் ஆல்டுராஸ் ஜி4, மஹிந்த்ரா பொலேரோ, ஸ்கார்பியோ, மராஸ்ஸோ ஆகிய கார்களை வாங்குபவருக்கு அதிகபட்சமாக ரூ.81,500 வரை சலுகை வழங்கப்பட உள்ளது. ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை என பல்வேறு சலுகைகளை, பிப்ரவரி மாத இறுதிக்குள் பெறலாம். இதில் எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம். இச்சலுகைகள் டிசம்பர் இறுதி வரை கிடைக்கும்.
மஹிந்திரா XUV300: மஹிந்திராவின் காம்பாக்ட் எஸ்யூவி ஆன எக்ஸ்யூவி300 -க்கு ரூ.69,003 வரை கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கிறது. இதில் ரூ.30,003 ரொக்க தள்ளுபடி ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.25,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். கூடுதலாக சில சலுகைகளும் ரூ. 10,000 வரை வழங்கப்படுகிறது.
மஹிந்த்ரா ஆல்டுராஸ் ஜி4 : மஹிந்த்ரா கார் தயாரிப்புகளிலேயே மிக விலை உயந்த காரான ஆல்டுராஸ் ஜி4 காருக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 28.84 லட்சம் என்பதால் அதிக தள்ளுபடி சலுகைகளைப் வழங்கப்படுகிறது. ரூ. 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ. 11,500 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 20,000 கூடுதல் சலுகைகளுடன் ரூ.81,500 வரை சலுகை கிடைக்கிறது.