முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் (2022, ஏப்ரல்) 62,155 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு (2023) ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 73,136-ஆக உயர்ந்துள்ளது.

  • 16

    சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

    பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தனது விற்பனை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2023-ல் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த விற்பனை 18% வளர்ச்சியடைந்துள்ளது.ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் (2022, ஏப்ரல்) 62,155 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு (2023) ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 73,136-ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

    இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையானது 53,852 யூனிட்களில் இருந்து 28% அதிகரித்து 68,881-ஆக உயர்ந்துள்ளது என்று ராயல் என்ஃபீல்டு தனது சமீபத்திய அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.2022-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 53,852 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில் தற்போது 18% வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும் மறுபுறம் நிறுவனத்தின் ஏற்றுமதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்து உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை 8,303-ஆக இருந்தது. இந்த ஏற்றுமதி எண்ணிக்கை இந்த ஆண்டு ஏப்ரலில் 4,255 யூனிட்களாக குறைந்து உள்ளது.2023 ஏப்ரலில் 4,255 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதில் நிறுவனத்தின் சர்வதேச வணிகம் 49 சதவீதம் சரிவை கண்டுள்ளது.ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பி கோவிந்தராஜன் தனது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 46

    சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

    இது குறித்து பேசி இருக்கும் கோவிந்தராஜன், நாங்கள் FY 23-ஐ ஒரு ஹை நோட்டில் முடித்து விட்டு தற்போது FY 24-ஐ நம்பிக்கையுடன் தொடங்கி இருக்கிறோம். இந்தியாவிலிருந்து ஒரு உலகளாவிய மோட்டார் சைக்கிள் பிராண்ட் என்ற இலக்கை அடைய மற்றும் இதற்கான எங்களின் நிலையை மேலும் வலுப்படுத்த சமீபத்தில் எங்களின் Hunter 350 மற்றும் Scram 411 உள்ளிட்ட தயாரிப்புகளை அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க சந்தைகளில் அறிமுகப்படுத்தினோம்.

    MORE
    GALLERIES

  • 56

    சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

    இந்த தயாரிப்புகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு மேற்கண்ட இந்த வெளிநாட்டு சந்தைகளில் எங்களின் காலடியை வலுப்படுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன் என கூறி இருக்கிறார்.ராயல் என்ஃபீல்டின் Hunter 350-ல் 350cc ஜே-என்ஜின், டூயல் சேனல் ஏபிஎஸ், டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டியூப்லெஸ் டயர்களுடன் கூடிய அலாய் வீல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் Scram 411 மோட்டார் சைக்கிளானது Altitude-tested LS 410 என்ஜினைப் பெறுகிறது, இது கடினமான சூழ்நிலைகளை தாங்கும். மேலும் இந்த டூவீலர் நகர பாதைகள், மலை பாதை அல்லது சாலைப் பயணமாக இருந்தாலும் சரி, எந்த சூழலுக்கும் ஏற்றது.

    MORE
    GALLERIES

  • 66

    சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

    இந்த பைக் கிராஃபைட் ரெட், கிராஃபைட் எல்லோ, ஸ்கைலைன் ப்ளூ, பிளேசிங் பிளாக், கிராஃபைட் ப்ளூ, ஒயிட் ஃபிளேம் மற்றும் சில்வர் ஸ்பிரிட் உள்ளிட்ட 7 வண்ணங்களில் வருகிறது. Eicher Motors-ன் ஒரு பிரிவான ராயல் என்ஃபீல்டு அதன் தயாரிப்பு வரிசையில் கான்டினென்டல் ஜிடி 650, ஹண்டர் 350, கிளாசிக் 350, ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரர், ஐகானிக் புல்லட் 350, ஸ்க்ராம் 411 ஏடிவி கிராஸ்ஓவர், நியூ சூப்பர் மெட்டோர் 650 மற்றும் இன்டர்செப்டர் 650 உள்ளிட்டவை அடங்கும்.

    MORE
    GALLERIES