முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!

ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!

Royal Enfield Price Hike | 5 மாதங்களில் இரண்டாவது முறையாக ராயல் என்ஃபீல்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது, புதிய விலைகளை இங்கே பார்க்கவும்

 • 15

  ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!

  பைக் பிரியர்கள் பலரின் நீண்ட நாள் கனவே, ஒரு ராயல் என்ஃபீல்டு வண்டியை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பது தான். இப்படி பலரும் இந்த வண்டியின் மீது தீராக்காதல் கொண்டிருப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு பைக்கின் எஞ்சின், வண்டியின் டிசைன், திறன் ஆகியவற்றை முக்கிய அம்சமாக பார்ப்பார்கள். ஆனால், இந்த வண்டியின் விலை அவ்வப்போது ஏறிக்கொண்டே செல்வதால் ராயல் என்ஃபீல்டு பிரியர்களுக்கு மிகுந்த கவலையை இது தந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!

  ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் உற்பத்தி விலைகளை உயர்த்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்த்தியுள்ளதாக தெரிவித்தனர். ஸ்கிரம் 411, மீட்டியார் 350, ஹிமாலயன் 411 மற்றும் மிகவும் பிரபலமான கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 போன்ற மாடல்கள் உட்பட அனைத்தின் விலையும் ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி புல்லட் 350 மாடலின் விலை ரூ 3,110 உயர்ந்துள்ளது. அதேசமயம் கிளாசிக் 350 மாடலுக்கு ரூ 2,846 உயர்த்தப்பட்டு உள்ளது. இப்படி பல பைக் மாடல்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய விலை பட்டியல் குறித்து விரிவாக பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 35

  ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!

  ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 : கிளாசிக் 350 மாடலில் உள்ள ரெட்டிச் ரெட்/சேஜ் கிரீன்/கிரே ஆகிய வண்டிகளின் விலை ரூ 1,90,092 ஆக உள்ளது. ஹல்சியோன் பிளாக்/கிரே/பச்சை நிறமுடைய பைக் ரூ 1,92,889-க்கும், ஹல்சியோன் பிளாக்/கிரே/பச்சை மாடல் ரூ 1,98,971 ஆகவும், சிக்னல்கள் டெசர்ட் சாண்ட்/மார்ஷ் கிரே நிறம் கொண்ட வண்டியின் விலை ரூ 2,10,385-க்கும், டார்க் கன்மெட்டல் கிரே/டார்க் ஸ்டெல்த் பிளாக் மாடல் வண்டி ரூ 2,17,589 விலையுடனும் விற்கப்படுகிறது. மேலும், குரோம் பிரான்ஸ்/சிவப்பு நிற பைக்கின் விலை ரூ 2,21,297 ஆகவும் ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!

  ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 : அடுத்தாக புல்லட் 350மாடலில் உள்ள கேஎஸ்: சில்வர்/ஓனிக்ஸ் பிளாக் வண்டி ரூ 1,68,584-க்கும், கேஎஸ்: கருப்பு நிற வண்டியின் விலை ரூ 1,75,584 ஆகவும், ES: ஜெட் பிளாக்/ரீகல் ரெட்/ராயல் புளூ ஆகிய நிறமுடைய வண்டி ரூ.1,85,289-க்கும் விலை ஏற்றத்துடன் விற்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 மாடலின் விலை ரூ.4,225 உயர்த்தப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!

  ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 : விலை உயர்வுக்கு பிறகு மீட்டியார் 350 மாடல் வண்டிகளின் விலை இதோ. ஃபயர்பால் மஞ்சள்/சிவப்பு நிறமுடைய வண்டி ரூ 2,05,844-க்கு விற்கப்படுகிறது. அதே போன்று ஃபயர்பால் ஒயிட் கஸ்டம்/பிளாக் கஸ்டம் வண்டியின் விலை ரூ 2,07,681 ஆகவும், ஸ்டெல்லார் நீலம்/சிவப்பு/கருப்பு நிற வண்டி ரூ 2,11,924-க்கும், ஸ்டெல்லர் பிளாக் கஸ்டம் வண்டியானது ரூ 2,13,760-க்கும் விற்கப்படுகிறது. இவற்றில் சூப்பர்நோவா பிரவுன்/ப்ளூ காம்போ வண்டி ரூ 2,22,061-க்கும், சூப்பர்நோவா சில்வர் கஸ்டம் நிறமுடைய வண்டி ரூ 2,23,896 தற்போது விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES