முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » 650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது 650சிசி  லைன்அப்-ஐ பல பைக்குகளை அறிமுகம் செய்வதன் மூலம் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. 

 • 16

  650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

  பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது 650சிசி லைன்அப்-ஐ பல பைக்குகளை அறிமுகம் செய்வதன் மூலம் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. நிறுவனத்திடமிருந்து புதிதாக வரவிருக்கும் Scrambler 650 பல முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது மற்றும் இதன் லீக் இமேஜ்கள் மார்க்கெட் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்கனவே சலசலப்பு மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் புதிய ஸ்க்ராம்ப்ளர் பற்றிய எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக ஷேர் செய்யவில்லை. எனினும் இந்த பைக் Interceptor Bear 650 என்ற பெயரில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 26

  650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

  ஏனென்றால் ராயல் என்ஃபீல்டின் தாய் நிறுவனமான Eicher Motors Limited, சமீபத்தில் Interceptor Bear 650 என்ற பெயரை ட்ரேட்மார்க்-கிற்காக விண்ணப்பித்துள்ளது. RushLane வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், Eicher Motors நிறுவனமானது நியூசிலாந்தில் ‘Interceptor Bear 650’ என்றும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் 'Royal Enfield Interceptor Bear 650’ என்றும் அறிமுகப்படுத்த வர்த்தக முத்திரை வைத்துள்ளதாக ரஷ்லேன் தகவல் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

  தற்போதைய நிலவரப்படி ராயல் என்ஃபீல்டு அதன் 650சிசி பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்ட ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் சூப்பர் மீடியர் 650 உள்ளிட்ட 3 பைக்ஸ்களை கொண்டுள்ளது. இந்நிலையில் தான் Royal Enfield Interceptor Bear 650 என்ற பெயருடன் விரைவில் வரவிருக்கும் ஸ்க்ராம்ப்ளர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட பைக்கின் ஸ்பை இமேஜ்கள் அடிக்கடி லீக்கானதால், இதை பற்றிய முக்கிய விவரங்கள் சில பைக் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே கிடைத்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 46

  650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

  இதுவரை லீக்காகி இருக்கும் ஸ்பை இமேஜ்களை வைத்து பார்த்தால் இந்த பைக் LED ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ் மற்றும் முன்புறத்தில் பிளாக் கிரில் உள்ளிட்டவற்றை பெற வாய்ப்புள்ளது. லீக்காகி இருக்கும் இமேஜ்களில் டர்ன் இண்டிகேட்டர்ஸ்களுக்கு கீழே, என்ஜினை பாதுகாக்க ஒரு Bash plate-டுடன் Auxiliary லைட்ஸ்களின் செட்டை பார்க்க முடிகிறது. இன்ஜினை பொறுத்தவரை விரைவில் அறிமுகமாக உள்ள இந்த பைக் பெரும்பாலும் கான்டினென்டல் ஜிடி 650, இன்டர்செப்டர் 650 மற்றும் Super Meteor 650 பைக்ஸ்களில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே 648சிசி பேர்ல்ல் ட்வின் எஞ்சினை பெறும்.

  MORE
  GALLERIES

 • 56

  650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

  மேலும் பவர் விவரங்கள் அப்படியே இருக்க கூடும். உங்களது கணக்கீட்டிற்காக.. கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் எஞ்சின் 7150 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 47 பிஎச்பி ஆற்றலையும், 5250 ஆர்பிஎம்-மில் அதிகபட்சமாக 52 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. எனினும் வரவிருக்கும் 650சிசி புதிய பைக்கில் என்ஜினில் வேறுபாடு காட்ட சில டியூனிங் செய்யப்படலாம். Interceptor 650 பைக் 6-ஸ்பீடு கியர் பாக்ஸை கொண்டிருப்பதால் மற்றும் நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர்களுக்கும் இதையே பயன்படுத்த கூடும்.

  MORE
  GALLERIES

 • 66

  650 சிசி.. சூப்பர் லுக்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் அசத்தல் பைக்!

  Interceptor 2119 மிமீ நீளமும், 835 மிமீ அகலமும், 1067 உயரமும் கொண்டது. பைக்கின் kerb weight சற்று அதிகமாகும். 218 கிலோ எடை மற்றும் டேங்க் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்டது. கூடுதல் அம்சங்களை பொறுத்தவரை, பைக்கில் USB சார்ஜர், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ப்ரீலோட் ரியர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES