முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு நிறுவத்தின் ஹண்டர் 350 மாடல் அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் என்ற பெருமையை பெற்றுள்ளது.

  • 17

    விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

    புல்லட் என்றாலே தானாகவே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக் கொள்ளும். அதனால் ராயல் என்ஃபீல்டின் புல்லட் பைக்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. எப்போதுதே தனக்கென ஒரு நிலையான மார்க்கெட்டை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பைக்குகளுடன் விற்பனையில் களை கட்டி வருகிறது. ஆம்..கடந்த மாதம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ன் 24,466 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து 10,824 யூனிட்கள் விற்பனையுடன் ஹண்டர் 350 இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 27

    விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

    ராயல் என்ஃபீல்டு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய புத்தம் புதிய 350சிசி பைக், நிறுவனத்தின் கேம் சேஞ்சராக மாறியுள்ளது. புதிய பைக் வந்தவுடன் மற்ற நல்ல மாடல்களை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ராயல் என்ஃபீல்டின் புல்லட் கூட விற்பனையில் பின்தங்கியுள்ளது. ஆனால் ஹண்டர் 350 விற்பனையில் களைகட்டி வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மற்ற பைக்குகள் விற்பனையில் இரண்டையும் விட மிகவும் பின்தங்கியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 37

    விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

    ஹண்டர் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, ராயல் என்ஃபீல்டின் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் வாகனமாக புல்லட் இருந்தது, ஆனால் ஹண்டர் இந்த கிரீடத்தை புல்லட்டிடம் இருந்து பறித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 விலை குறைந்த ராயல் என்ஃபீல்டு பைக் ஆகும். ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மூன்று வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 47

    விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

    கருப்புடன் சில்வர், டாப்பர் எனப்படும்  கிரெவுடன் வெள்ளை மற்றும் ரெபெல் எனப்படும் சிவப்பு, கருப்பு மற்றும் நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் இந்த பைக் வெளியாகிறது.  ஃபேக்டரி வேரியன்டின் விலை ரூ.1,49,900 மற்றும் மிட்-ஸ்பெக் டேம்பர் வேரியன்டின் விலை ரூ.1,66,900 மற்றும் டாப்-எண்ட் ரெபெல் மாடல் ரூ.1,71,900. இந்த மூன்று விலைகளும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

    MORE
    GALLERIES

  • 57

    விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

    ஹண்டர் 350 பைக்கில் கிளாசிக் 350 பைக்கில் இருக்கும் அதே 349cc ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 20.2PS பீக் பவர் மற்றும் 27Nm பீக் டார்க் திறனை உற்பத்தி செய்யக் கூடியது. இந்த எஞ்சினுடன் ஃபைவ் ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க்  13 லிட்டர் கொள்ளும். இது 35 முதல் 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350-ல் ரெட்ரோ-ஸ்டைல் ​​செமி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது டிரிப்பர் நேவிகேஷன் அமைப்பைக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

    அதோடு, சிறிய டிஜிட்டல் இன்செட் உடன் ஓடோமீட்டர், ஃப்யூவல் கேஜ், ட்ரிப் மீட்டர் மற்றும் பராமரிப்பு தொடர்பான எச்சரிக்கை உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் இந்த பைக்கில் உள்ளது. மிட்-ஸ்பெக் மற்றும் டாப் எண்ட் மாடலில் கியர் பொசிஷன் இண்டிகேட்டருடன் பெரிய டிஜிட்டல் இன்செட் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350…!

    இது சுவிட்ச் கியரில் ரெட்ரோ தோற்றமுடைய ரோட்டரி சுவிட்ச் கியூப் மற்றும் இடது சுவிட்ச் கியூப் பொருத்தப்பட்ட USB போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இத்தனை அம்சங்களுடன் ஹண்டர் 350 பைக் கிடைப்பதால் விற்பனையில் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES