சுற்றுச் சூழல் மாசு, விலை ஏற்றம் என பல காரணிகளால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிபொருளின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் தான் எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. சிஎன்ஜி இந்த கார்கள் மிகவும் சிக்கனமாவை, அதோடு காற்று மாசுபாட்டையும் குறைக்கிறது. ஆனால் இது வாயு என்பதால், அது தொடர்பான சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே அது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வது அவசியம்.
இதற்கு முதல் காரணம் இந்தியாவில் பெரும்பாலும் கார் உற்பத்தியாளர்களால் சிஎன்ஜி கிட்கள் பொருத்தப்படுவதில்லை. இந்தியாவில் பலரும் தங்கள் காரில் சிஎன்ஜி கிட்டை வெளியில் உள்ள மெக்கானிக்குகள் மூலம் பொருத்திக் கொள்கிறார்கள். அது போன்ற CNG கிட் கொண்ட வாகனங்களில், CNG ஃபில்லரின் குமிழ் பின்புறத்திலோ அல்லது நடு இருக்கையின் கீழோ இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சிஎன்ஜி நிரப்பும் குமிழ் எங்கே என்று மக்களுக்குத் தெரியாது. ஒரு வேளை இருக்கையின் அடியில் இருந்தால் காரில் இருப்பவர்களுக்கு தொந்தரவு. எனவே மக்கள் கீழே இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிஎன்ஜி ரீஃபில்லிங் செய்யும் போது, பாதுகாப்பு கருதி காரில் இருந்து கீழே இறங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தொட்டியின் உள்ளே மிக அதிக அழுத்தத்தில் CNG சேமிக்கப்படுகிறது. டேங்கில் சிஎன்ஜி நிரப்பும்போது கசிவு அல்லது வெடிப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விடும். எனவே பாதுகாப்பு கருதி, பயணிகள் கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிஎன்ஜி விஷம் அல்ல, ஆனால் அதன் வாசனை சிலருக்கு பிடிக்காமல் போகலாம். வாகனங்களில் சிஎன்ஜி கசிவால் தலைவலி, வாந்தி, தலைசுற்றல் என பலருக்கும் தொந்தரவுகள் ஏற்படுவது வழக்கம். எனவே, இந்த சிக்கல்களைத் தவிர்க்க, சிஎன்ஜி நிரப்பும் போது வாகனத்தை விட்டு இறங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். இது தவிர, சிஎன்ஜி பம்ப் வடிவமைப்பு பெட்ரோல் அல்லது டீசல் பம்ப்பில் இருந்து வேறுபட்டது. அதனால் சிஎன்ஜி நிரப்பும் போது வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க காரை விட்டு இறங்கி CNG பம்பின் மீட்டர் ரீடிங்கைச் சரிபார்ப்பதும் நல்லது.