இந்தியாவில் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டுக்கு சமீபத்தில் அறிமுகமான ஓலா S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேலும் போட்டியை அதிகரித்திருக்கிறது. இந்த செக்மெண்டில் ஏற்கனவே கோலோய்ச்சி வருகிறது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 450X மாடல். இரண்டு ஸ்கூட்டர்களுமே கவர்ச்சிகரமான டிசையில் என்னற்ற அம்சங்களை கொண்டிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல் சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்க இவ்விரண்டு ஸ்கூட்டர் மாடல்கள் குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம்.
டிசைனை பொறுத்தவரையில் Ola S1 மற்றும் ஏதெர் 450X என இரண்டு மாடல்களுமே எதிர்கால டிசைன் லாங்குவேஜ் அடிப்பையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. டிசைனைப் பொறுத்தவரையில் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று சளைத்தது கிடையாது. எடை: ஓலா S1 - 125 கிலோ ஏதெர் 450X - 108 கிலோ அண்டர்ஸ்டோரேஜ்: ஓலா S1 - 36 லிட்டர்கள் ஏதெர் 450X - 22 லிட்டர்கள் கிரவுண்ட் கிளியரன்ஸ்: ஓலா S1 - 165 மிமீ ஏதெர் 450X - 160 மிமீ அண்டர் ஸ்டோரேஜ், கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அம்சங்களில் ஓலா ஸ்கூட்டர்களின் கை ஓங்கியிருக்கிறது. எடை அடிப்படையில் ஏதெர் ஓரளவு எடை குறைவாக இருக்கிறது.
ஓலா S1 அம்சங்கள் :
ஓலா S1 proவில் கஸ்டமைஸ்ட் கிராபிக்ஸ் உடன் கூடிய 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் டேஷ்போர்ட் இடம்பெற்றுள்ளது. இணைய இணைப்பு இல்லாத போது கூட ரியல் டைம் நேவிகேஷன் வழங்கக்கூடிய பில்ட் இன் மேப்ஸ் உள்ளது. மியூசிக், கால்கள் செய்யக்கூடிய வசதி கிடைக்கிறது. மேலும் வாய்ஸ் கட்டளைகளை கொடுக்க முடியும்.
குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் (லாக்/அன்லாக்), ரிவர்ஸ் மோட், ஜியோ ஃபென்சிங், பில்ட் இன் ஸ்பீக்கர் என என்னற்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
இது தவிர ஓலா எலக்ட்ரிக் எனும் பிரத்யேக ஆப் மூலம் ஸ்பீடு, ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், பேட்டரியின் அளவு, வாகனம் செல்லும் தூரம் என பல தகவல்களையும் உங்களின் ஸ்மார்ட் போன் வழியாக பெற்றுக்கொள்ளலாம்.
ஏதெர் 450X அம்சங்கள்:
ஏதெர் 450X-ல் புளூடூத் இணைப்புடன் கூடிய 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. தொலைபேசி அழைப்புகளையும், மியூசிக் போன்ற அம்சங்களை இதில் பயன்படுத்த முடியும் என்றாலும் வாய்ஸ் கட்டளை வசதி இதில் தரப்படவில்லை.
ரிவர்ஸ் அசிஸ்டுடன் கூடிய பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், ஒளீரூட்டப்பட்ட பூட் பகுதி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன.
ஏதெர் நிறுவனத்தின் பிரத்யேக செயலி மூலம் அருகில் இருக்கும் சார்ஜிங் நிலைய இருப்பிடம், வாகன தகவல்கள், லைவ் லொகேஷன் மற்றும் சில கோப்புகளை சேமித்துக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.
ஓலா S1 ஸ்கூட்டரில் 3.97 kWh திறனுடன் கூடிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் 11 bhp திறனை வழங்குகிறது. Normal, Sport, மற்றும் Hyper என 3 விதமான ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 181 கிமீ தூரம் செல்ல முடியும். அதே போல அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆக உள்ளது. இந்த பைக்கில் 40 கிமீ வேகத்தை 3 நொடிகளில் எட்டிப்பிடித்துவிட முடியும்.
ஏதெர் 450X ஸ்கூட்டரில் 2.9 kWh திறனுடன் கூடிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் 9 bhp திறனை வழங்குகிறது. Eco, Ride, Sport மற்றும் Warp என 4 விதமான ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 116 கிமீ தூரம் செல்ல முடியும். அதே போல அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆக உள்ளது. இந்த பைக்கில் 40 கிமீ வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிப்பிடித்துவிட முடியும்.
திறன் அடிப்படையில் ஏதெர் பைக்கை காட்டிலும் அதிக மைலேஜ் மற்றும் வேகம் என ஓலா ஸ்கூட்டர் முந்துகிறது.
ஓலா S1 pro பைக்கின் பேட்டரி வீட்டு சார்ஜரை பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் ஆக 6 மணி நேரம் 30 நிமிடம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 75 கிமீ செல்லும் தூரத்தை 18 நிமிட சார்ஜ் வழங்கிவிடுகிறது.
ஏதெர் 450X ஸ்கூட்டரின் பேட்டரி வீட்டு சார்ஜரை பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் ஆக 5 மணி நேரம் 45 நிமிடம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 15 கிமீ செல்லும் தூரத்தை 10 நிமிட சார்ஜ் வழங்கிவிடுகிறது.
ஓலா S1 pro பைக்கின் பேட்டரி வீட்டு சார்ஜரை பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் ஆக 6 மணி நேரம் 30 நிமிடம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 75 கிமீ செல்லும் தூரத்தை 18 நிமிட சார்ஜ் வழங்கிவிடுகிறது. ஏதெர் 450X ஸ்கூட்டரின் பேட்டரி வீட்டு சார்ஜரை பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் ஆக 5 மணி நேரம் 45 நிமிடம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 15 கிமீ செல்லும் தூரத்தை 10 நிமிட சார்ஜ் வழங்கிவிடுகிறது.
சஸ்பென்ஷன்:
ஓலா S1 pro : single-sided fork and mono-shock
ஏதெர் 450X : conventional twin forks with mono-shock
பிரேக்கிங்:
ஓலா S1 pro : 220 mm front and 180 mm rear disc brakes
ஏதெர் 450X : 200 mm front and 190 mm rear disc brakes.
விலை:
ஓலா S1 pro : ₹1,29,999
ஏதெர் 450X : ₹1,44,500
இது எக்ஸ் ஷோரூம் அடிப்படையிலான விலை அதே போல ஒவ்வொரு இடத்துக்கு தகுந்தபடி விலையில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் விலை அடிப்படையிலும் ஓலா ஸ்கூட்டர் ஏதெரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது.