முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

ஓலா நிறுவனத்தின் குறிப்பிட்ட ஸ்கூட்டர்களில் ஃபோர்க் உடைந்து விடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதிய, ஸ்ட்ராங்கான ஃபோர்க்குகளை இலவசமாக மாற்றித்தர முடிவு செய்துள்ளது ஓலா நிறுவனம்.

 • 16

  இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

  இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஓலா நிறுவனம் முக்கியமான ஒன்றாகும். தற்போது அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனம் இது தான். இந்நிறுவனத்தின் ஒரு சில ஸ்கூட்டர்களின் முன்பக்க ஃபோர்க் பகுதி உடைவதாகச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களுடன் பதிவுகள் வெளியானது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கான புதிய முன்பக்க ஃபோர்கை உருவாக்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

  வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே விற்பனை செய்த தனது எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் இந்த ஃபோர்க்கை மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த புதிய வடிவிலான ஃபோர்க் நீடித்த உழைப்பு மற்றும் உறுதித் தன்மை நிறைந்ததாக இருக்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஃபோர்க் மாற்றத்தை இலவசமாகச் செய்து தருகிறது அந்நிறுவனம். ஃபோர்க்கை இலவசமாக மாற்றுவதற்கு ஸ்லாட் புக்கிங் செய்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 36

  இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

  அதற்கான புக்கிங் மார்ச் 22ம் தேதி துவங்குகிறது. அதில் ஸ்லாட்டை புக் செய்துவிட்டு புக் செய்த ஸ்லாட்டில் உங்கள் வாகனத்தில் உள்ள முன்பக்க ஃபோர்க்கை மாற்றிக்கொள்ளலாம். ஓலா ஸ்கூட்டரில் கேப்ரியல் நிறுவனத்தின் டிசைனில் உருவாக்கப்பட்ட முன்பக்க சிங்கிள் சைடட் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏஸ்1 ஏர் ஸ்கூட்டரை பொருத்தவரை டெலஸ்கோபிக் ஃபோர்க்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சிங்கிள் சைடட் ஃபோர்க்கை மட்டுமே ஓலா நிறுவனம் மாற்ற முடிவு செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

  புதிய ஃபோர்க்குகள் புதிய ஸ்கூட்டர்களில் மட்டுமல்லாமல் ஏற்கனவே விற்பனையான ஸ்கூட்டர்களிலும் மாற்றப்படவுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெற முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. இந்திய சந்தையில் தனது பிராண்டுகளின் விற்பனையை அதிகரிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஓலா நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இந்திய முழுவதும் 500 ஷோரூம்களை திறக்க ஓலா முடிவு செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

  இதுவரை ஆன்லைனில் மட்டுமே தனது பிராண்டுகளை விற்பனை செய்து வந்தது ஓலா. ஆனால் இப்போது நேரடி விற்பனை மையங்களை திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஓலா நிறுவனம். அதோடு தனது வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் சர்வீஸையும் வழங்குகிறது ஓலா நிறுவனம். ஓலா ஸ்கூட்டரை வாங்கியவர்கள் தங்கள் ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டால் சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு தங்கள் வீட்டில் வைத்தே ஸ்கூட்டரை சர்வீஸ் செய்து கொள்ள முடியும்.

  MORE
  GALLERIES

 • 66

  இலவசமாக ஃபோர்க் மாற்றிக்கொள்ளலாம்..! வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஓலா…

  வாடிக்கையாளர் சேவையை மேலும் நவீனமாக்க தனது நேரடி அனுபவ சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க ஓலா முடிவு செய்துள்ளது. இந்த சர்வீஸ் சென்டர்களில் டெஸ்ட் ரைடு, ஸ்கூட்டர் குறித்த தகவல்கள், ஸ்கூட்டரை வாங்குவதற்கான உதவி, ஃபைனான்ஸிங் ஆப்ஷன் என பல்வேறு சேவைகளும் வழங்கப்படும். மொத்தத்தில் வாடிக்கையாளர்களை எளிதாக அனுக முடிவதன் மூலம் தனது விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது ஓலா நிறுவனம்.

  MORE
  GALLERIES