நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் EV நிறுவனங்களில் ஒன்றான Ola Electric நிறுவனம், குறுகிய காலத்திற்குள் தனது 500-வது எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை (Experience centre) சமீபத்தில் திறந்துள்ளது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோர் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஏனெனில் Ola Electric நிறுவனம் கடந்த 2021-ல் தான் உற்பத்தியை தொடங்கியது. நிறுவனம் அதன் Direct-to-Consumer (D2C) சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
D2C சர்விஸ்களில் டோர் ஸ்டெப் டெலிவரி மற்றும் சர்வீஸிங் உள்ளிட்டவை அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பரில் புனேயில் தனது முதல் அவுட்லெட்டை திறந்து 8 மாதங்களுக்குள் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், ஸ்ரீநகர் மாவட்டத்தில் சமீபத்தில் 500-வது எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை திறந்துள்ளது. ஏற்கனவே சுமார் 300 நகரங்களில் நிறுவப்பட்டுள்ள நிலையில், ஓலா எலெக்ட்ரிக் தனது ஷோரூம் நெட்வொர்க்கை வரும் ஆகஸ்ட் 2023-க்குள் மொத்தம் 1,000-ஆக விரிவுபடுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு புனேவில் தனது முதல் EC-யை துவக்கிய சிலமாதங்களுக்குள் நாட்டின் வாகனத் துறையில் மிகப்பெரிய D2C ரீடெய்ல் நெட்வொர்க்கை உருவாக்கி, நாடு முழுவதும் EC-க்களை தீவிரமாக அறிமுகப்படுத்தி வருகிறது ஓலா எலெக்ட்ரிக். Ola Electric-ன் CMO அன்ஷுல் கண்டேல்வால் பேசுகையில், "நாட்டில் எங்களின் 500-வது ஸ்டோரை திறந்துள்ளதன் மூலம், எங்கள் D2C அணுகுமுறை கொண்டு எங்கள் நோக்கத்தை அடைவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களது இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் எலெக்ட்ரிக் மொபிலிட்டியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக இருக்கிறது.
இந்தியாவிற்கான தூய்மை மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்தை முன்னெடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார். எங்களின் 500-வது ஸ்டோர் ஓப்பனிங் என்பது எங்களது சாதனைகளின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இன்னும் எங்கள் முன் இருக்கும் சவால்களை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. Electric mobility துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்க நாங்கள் எங்கள் D2C மாடலுடன் சிறந்த நிலையில் இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
500 Experience Centre-களை அமைத்த பிறகும் கூட கணிசமான அளவு ஆர்டர்கள் ஆன்லைனில் செய்யப்படுவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம்,ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இப்போது நாடு முழுவதும் 500 EC-க்களைக் கொண்டிருந்தாலும், இந்த நிறுவனத்தின் விற்பனையில் கணிசமான பகுதி அதன் வெப்சைட் மற்றும் ஆப்ஸ்களில் இருந்து வருகிறது. இதனிடையே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமானது தற்போது இந்தியாவின் EV ஸ்கூட்டர் சந்தையில் சுமார் 40% ஆக்கிரமித்துள்ளது.
3 மாடல்களை விற்பனைக்கு கொண்டுள்ள Ola Electric நிறுவனம் இந்தியாவில் EV ஸ்கூட்டர் சந்தையில் 40% ஐ கைப்பற்றி அதிகம் வளர்ந்து வரும் EV இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் நிறுவனம் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்தது. கடந்த மாதம் சுமார் 30,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து, தொடர்ந்து எட்டாவது மாதமாக EV டூ வீலர் விற்பனை அட்டவணையில் முதலிடத்தை பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.