இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் என்று சொன்னாலே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தான் முதலில் நினைவுக்கு வரும். எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படலாம் அல்லது அறிமுகம் செய்யப்படலாம் என்று சொல்லத் தொடங்கிய காலகட்டத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் துரிதமாக வேலைகளைத் தொடங்கி, இரண்டு விதமான ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. தற்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வந்தாலும், நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முன்னேறிய வண்ணம் இருக்கிறது
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, பவிஷ் அகர்வால் இதைப் பற்றி கூறுகையில், ‘இப்போது 80 சதவிகித ஓலா பயனர்கள், ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் இருக்கும் இடங்களின் 20 கிமீ தூரத்துக்குள் தான் வசிக்கிறார்கள். அதாவது, யூசர்கள் வசிக்கும் இருப்பிடங்களின் 20 கிமீ தொலைவுக்குள் ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் உள்ளன. இதை மேம்படுத்தும் வண்ணம், அடுத்த மாத இறுதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அருகில் ஓலா மையங்கள் இருக்கும்படி 500 மையங்கள் திறக்க இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
அது மட்டுமிலாமல், ஓலாவில் இருந்து முதல் முறையாக ஒரு எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் நாடு முழுவதும் இருப்பதால், ஆன்லைனில் வாங்கவும், டெஸ்ட் ரைடு முன்பதிவு செய்து ஓட்டிப் பார்க்கவும், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருவது அதிகரித்து வருகிறது. எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மூலம் நிறுவனத்தின் தயாரிப்புகள் இன்னும் நிறைய வாடிக்கையாளர்களை சென்றடையும் வாய்ப்பும் அதிகம் என்று கூறப்படுகிறது.
ஓலா எலக்ட்ரிக் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, Ola S1-சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. அதே போல, கடந்த ஆண்டு மீண்டும் அதே நாளில் எலக்ட்ரிக் கார் அறிமுகம் பற்றிய செய்தியை அறிவித்தது.Ola எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆண்டு, S1 மற்றும் S1 ப்ரோ என்று இரண்டு மாடல் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தி, முன்பதிவுகளையும் தொடங்கியது. S1 விலை ரூ. 99,999, S1 ப்ரோவின் விலை 1.27 லட்சம் மற்றும் S1 air மாடலின் விலை ரூ. 84,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, S1 சீரிஸின் விலை குறைவான வேரியன்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் பேட்டரி கெப்பாசிட்டி, 2kWh மற்றும் டாப் ஸ்பீட், ஒரு மணி நேரத்துக்கு 90 கிமீ ஆகும். S1 Air மாடல் மூன்று வேரியன்ட்டுகளுடன வருவதால், டெலிவரி மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.