முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?

ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?

பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹோண்டா நிறவனம் தனது ஆக்டிவா-2023 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் அம்சங்கள், விலைடி உள்ளிட்ட விபரங்களை இப்போது பார்க்கலாம்.

 • 15

  ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?

  பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா-2023 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் அம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இப்போது பார்க்கலாம். ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆக்டிவா 125 மாடல் OBD2 விதிகளுக்குப் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 25

  ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?

  இத்துடன் H ஸ்மார்ட் வேரியண்டையும் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆக்டிவா டிரம், டிரம் அலாய், டிஸ்க் மற்றும் H ஸ்மார்ட் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 125சிசி ஆக்டிவா மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கௌல், அப்ரனில் மவுண்ட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள், பாடி நிறத்தால் ஆன முன்புற ஃபெண்டர், பாடி பேனல் மற்றும் அப்ரனில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?

  புதிய 2023 ஆக்டிவா பேல் நைட் ஸ்டார்ட் பிளாக், ஹெவி கிரே மெட்டாலிக், ரிபல் ரெட் மெட்டாலிக், பேல் பிரஷியஸ் ஒயிட் மற்றும் மிட்நைட் புளூ மெட்டாலிக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஆக்டிவா 125 மாடலில் ஹோண்டா நிறுவனம் OBD2 விதிகளுக்கு தேவையான மாற்றங்களை செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் 123.97சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?

  இந்த என்ஜின் 8.18 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பொசிஷன் லேம்ப்கள், மேம்பட்ட ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பம், ஏசிஜி ஸ்டார்டர், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு எஞ்சின் இன்ஹிபிட்டர் அம்சம், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என அசத்தலான அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஸ்கூட்டரின் முந்தைய வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 55

  ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?

  ஹோண்டா ஆக்டிவா டிரம் ரூ. 78 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், ஹோண்டா ஆக்டிவா டிரம் அலாய் ரூ. 82 ஆயிரத்து 588 ரூபாய்க்கும், ஹோண்டா ஆக்டிவா டிஸ்க் ரூ. 86 ஆயிரத்து 093 ரூபாய்க்கும் ,ஹோண்டா ஆக்டிவா H-ஸ்மார்ட் ரூ. 88 ஆயிரத்து 093 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் ஆக்டிவா புதிது புதிதாகத் தொழில்நுட்ப மேம்பாடுகளோடு வெளியாகி வருகிறது.

  MORE
  GALLERIES