ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட் நிறுவனம் OBD2-இணக்கமான (OBD2-compliant) 2023 Activa 125-ஐ புதிய H-ஸ்மார்ட் வேரியன்ட்டுடன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்கள் புதிய H-ஸ்மார்ட் வேரியன்ட் தவிர வழக்கமான டிஸ்க், டிரம் அலாய் மற்றும் டிரம் பிரேக் வேரியன்ட்ஸ்களுடன் விற்பனை செய்யப்படும்.
ஹோண்டா நிறுவனம் புதிய 2023 ஆக்டிவா 125-ன் OBD2 compliant வெர்ஷனை ரூ.78,920 (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. OBD (On-board diagnostics) என்பது ஆட்டோமேட்டிவ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் என்பதை குறிக்கிறது. இந்த அம்சம் வெஹிகிள் ரிப்பேர் டெக்னீஷியன்களுக்கு வெஹிகிள் செல்ஃப்-டயக்னோசிஸ் மற்றும் ரிப்போர்ட்டிங் திறன்களை வழங்குகிறது. OBD2என்பது ஒரு OBD அல்லது OBDI-ன் இரண்டாம் தலைமுறையாகும். இதனிடையே சமீபத்தில் தான் நிறுவனம் 2023 ஆக்டிவா H-ஸ்மார்ட்டை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது.
பேர்ல் நைட் ஸ்டார்ட் பிளாக், ஹெவி கிரே மெட்டாலிக், ரெபெல் ரெட் மெட்டாலிக், பேர்ல் ப்ரீஷியஸ் ஒயிட் மற்றும் மிட் நைட் ப்ளூ மெட்டாலிக் உள்ளிட்ட 5 கலர் ஆப்ஷன்களில் 2023 ஹோண்டா ஆக்டிவா 125 கிடைக்கும். ஸ்டைலிங் சிறப்பம்சங்களில் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், ரீடைல்டு சிக்னேச்சர் எல்இடி பொசிஷன் லேம்ப்ஸ், கிராப்ரெயில் மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டெயில்-லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை அடங்கும்.
அம்சங்களை பொறுத்தவரை 2023 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரானது சைட் ஸ்டாண்டுடன் இன்ஜின் இன்ஹிபிட்டர், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், பாஸிங் ஸ்விட்ச், காம்பி-பிரேக் சிஸ்டம் (CBS) வித் ஈக்வலைசர் மற்றும் டூ லிட் ஃப்யூயல் ஓப்பனிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பெறுகிறது.மேலும் இந்த வாகனம் ஒரு புதிய ஓபன் ஃப்ரன்ட் கிளவ் பாக்ஸுடன் 18 லிட்டர் அன்டர்-சீட் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் Digi-Analog இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது, இது டோட்டல் ட்ரிப், கிளாக், ECO இன்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் ட்யூ இண்டிகேட்டர் போன்ற பல தகவல்களை ரைடர்ஸ்-க்கு வழங்குகிறது.
இந்த மாடலின் டாப்-எண்ட் வேரியன்ட்டான H-Smart, ஸ்மார்ட் ஃபைண்ட், ஸ்மார்ட் அன்லாக், ஸ்மார்ட் ஸ்டார்ட் மற்றும் ஸ்மார்ட் சேஃப் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஹோண்டாவின் புதிய ஸ்மார்ட் கீ ஃபங்ஷனுடன் வருகிறது. கூடுதலாக, இது Lock Mode-உடன் வருகிறது, இது பிசிக்கல் கீ-யை பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி 5 இன் 1 ஃபங்ஷனை (லாக் ஹேண்டில், இக்னிஷன் ஆஃப், ஃப்யூல் லிட் ஓபன், சீட் ஓபன் & இக்னிஷன் ஆன்) எளிதாக்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டியூப்லெஸ் ஃபிரிக்ஷன்லெஸ் டயர்களில் புதிய டயர் காம்பவுன்ட் டெக்னலாஜியை கொண்டுள்ளது.
2023 ஹோண்டா ஆக்டிவா 125 கிளாஸ் லீடிங் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. மேலும் மேம்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) தொழில்நுட்பத்துடன் கூடிய OBD2 compliant 125 cc PGM-FI பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் மற்றும் டார்க் டெலிவரி உள்ளிட்டவை ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடலை போலவே இருக்கும். eSP டெக்னலாஜியானது தனித்துவமான ஹோண்டா ஏசிஜி ஸ்டார்டர், ஸ்விங் பேக் அம்சம், ஸ்டார்ட் சோலனாய்டு, ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம் மற்றும் டம்பிள் ஃப்ளோ உள்ளிட்டவற்றுடன் வருகிறது. விலை விவரங்கள்:H-Smart வேரியன்ட் விலை - ரூ.88,093, Disc - ரூ.86,093, Drum Alloy - ரூ.82,588, Drum - ரூ.78,920