ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் தனது மலிவு விலை எஸ்யூவி தயாரிப்பான Nissan Magnite-ன் புதிய ஸ்பெஷல் எடிஷனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. Nissan நிறுவனம் இந்த ஸ்பெஷல் எடிஷனிற்கு GEZA என்று பெயரிட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷனில் வழக்கமான மாடலை விட சில சிறப்பம்சங்கள் கூடுதலாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. நிறுவனம் Magnite GEZA எடிஷனில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதுதவிர, புதிய அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Nissan Magnite GEZA ஸ்பெஷல் எடிஷனின் விலை விரைவில் வெளியிடப்பட உள்ளது. நிறுவனம் இந்த புதிய எடிஷன் மூலம் அதன் மலிவு விலை எஸ்யூவி-யின் விற்பனைக்கு புதிய உத்வேகத்தை அளிக்க முயற்சிக்கிறது.Magnite GEZA ஸ்பெஷல் எடிஷனிற்கான அதிகாரபூர்வ புக்கிங்ஸ் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.11,000 செலுத்தி Nissan Magnite GEZA ஸ்பெஷல் எடிஷன் எஸ்யூவி-யை புக்கிங் செய்து கொள்ளலாம்.
நிசான் மேக்னைட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. முன்னதாக அறிமுகத்தின் போது Magnite காரானது ரூ.5 லட்சத்திற்கும் (எக்ஸ்-ஷோரூம்) குறைவான ஸ்டார்ட்டிங் பிரைஸை கொண்டிருந்தது. இந்திய கார் சந்தையில் ஒரு உறுதியான இடத்தை தக்க வைக்க கண்டுபிடிக்க போராடிய நிசான் நிறுவனத்திற்கு Magnite வெற்றியை தந்துள்ளது.
அவ்வப்போது விலை திருத்தங்கள் இருந்த போதிலும் நிசான் நிறுவனத்தின் Magnite மாடல் மிகவும் சிறப்பான் விற்பனையை தொடர்ந்து பதிவு செய்தது. தற்போது ஒரு ஸ்பெஷல் எடிஷனின் அறிமுகத்துடன் இப்போது தனது Magnite மாடல் விற்பனையை மேலும் உயரும் என நிசான் எதிர்பார்க்கிறது. நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், Magnite-ன் மதிப்பை மேம்படுத்தும் சிறந்த அம்சங்களுடன் Magnite Geza ஸ்பெஷல் எடிஷனை எங்களின் சிறப்பான வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்த இருக்கிறோம் என்றார்.
ப்ரீமியம் ஜேபிஎல் ஸ்பீக்கர்களுடன் இந்த சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்கிறது. கூடுதலாக, இந்த ஸ்பெஷல் எடிஷனில் டிரஜெக்டரி ரியர் கேமரா, மொபைல் அப்ளிகேஷன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய Ambient lighting மற்றும் பிரீமியம் பீஜ் நிற அப்ஹோல்ஸ்டரி உள்ளிட்ட அம்சங்களும் அடக்கம்.