இந்தியாவின் பழம்பெரும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பஜாஜூம் ஒன்று. இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் வரிசையில் பஜாஜூக்கு தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது. பைக்குகள் வரிசையில் கடந்த இருபது ஆண்டுகளாக பல்சருக்கு தனி மவுசு உள்ளது. பல்சரின் மார்க்கெட்டை பதம் பார்க்கும் வகையில் பல்வேறு மாடல்களை போட்டி நிறுவனங்கள் தொடர்ந்து களமிறக்கி வருகின்றன.
இ-20 ரக எரிபொருளில் ஓடும் வாகனமாகவும் பல்சர் NS200 தயாரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான எரிபொருளில் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் இந்த (இ20) எரிபொருளில் இயங்கும்போது சற்று கூடுதல் சக்தி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கில் 199.05 சிசி லிகுய்ட் கூல்ட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.13 பிஎச்பி மற்றும் 18.74 என்எம் டார்க் சக்தியை வெளிப்படுத்தும். வசதியான ரைடிங்கிற்காக அப்சைடு டவுன் ஃபோர்க் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.
அசத்தலான இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது பல்சர் NS200.பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் புதிய அப்டேட்டாக கிரைமெகா பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவான வீல்களில் முன் பக்கத்தில் 300 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 230 மிமீ டிஸ்க்கும் உள்ளது. இது எந்த அதிவேகத்தையும் மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.