முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » 2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

2023 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தில் சார்பில் புதிய ரக கார்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

  • 16

    2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நிறுவனங்களின் கார்களின் வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் பல வருடங்களாக முன்னிலையில் இருந்து வருகிறது.சரியான கால இடைவெளியில் தன்னுடைய நிறுவனத்தில் இருந்து புதிய புதிய கார்களை அறிமுகப்படுத்தி சந்தையில் தங்கள் நிறுவனத்தின் மதிப்பை அதிகப்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள கார்களின் தரம் குறையாமலும் விற்பனை குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தில் சார்பில் புதிய ரக கார்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம். அவ்வாறு புதிதாக அறிமுகமாக இருக்கும் கார்களையும் அவற்றின் விவரங்களையும் பற்றி பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 26

    2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

    அயோனிக் 5 இவி (Ionic 5 EV) : மிக நீண்ட எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த ஹோண்டா நிறுவனத்தின் அயோனிக் 5 இவி என்ற எலக்ட்ரிக் கார் மிக விரைவிலேயே இந்தியாவில் அறிமுகம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஃபிளாக் ஷிப் காராக இது இருக்கும் எனவும் தெரிகிறது. இந்த வருடம் ஆரம்பத்தில் கியா ஈவி 6 என்ற மாடலின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிபியூவின் மற்றொரு அம்சமாகவே இந்த அயோனிக் 5 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பயோனிக் 5 சீகேடி ரூட் என்ற முறையில் இந்த கார் விற்பனைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

    ஹூண்டாய் நிறுவனமானது அயல்நாட்டு சந்தைகளில் இந்த காரை 58kWh மற்றும் 72.6 kWh என்ற இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்ய உள்ளது. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே இருந்த பிளாட்பார்மின் அடிப்படையிலேயே இது இருக்கும் என தெரிகிறது. வாகனத்தின் விலை மற்றும் தரத்தை பொறுத்து 170 குதிரை திறன் முதல் 233 குதிரை திறன் வரை அளவிலான சக்தியை பெற கூடிய எஞ்சின்கள் இதில் உள்ளன. 2023 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

    க்ரெட்டா ஃபேஸ் லிஃப்ட் (Creta facelift) : ஹோண்டாவின் அதிகம் விற்பனையாகும் கார் வகைகளில் க்ரெட்டா மிக முக்கிய இடத்தை பெறுகிறது. அதிலும் இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யுவி வகை கார்களில் தனது போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி இந்த க்ரெட்டா கார் தான் முன்னிலையில் உள்ளது. இந்த காரில் சில மாற்றங்களை செய்து மிட் லைப் பேஸ் லிப்ட் என்ற புதிய பாடலை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் அதன் டிசைனிலும் சில மாற்றங்களை செய்ய உள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள மாடலில் உள்ள அதே அளவு திறன் கொண்ட என்ஜின்களே இந்த காரிலும் பயன்படுத்தப்படும்.

    MORE
    GALLERIES

  • 56

    2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

    நியூ-ஜென் வெர்னா (New-gen verna) : கடைசியாக ஜென்வெர்னா மாடல் கார் இந்திய சந்தையில் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டே ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. அதிலும் தற்போது செடான் வகை கார்களின் விலைக்கு நிகராக எஸ்யூவி கார்களும் சந்தைக்கு வந்து விட்டதால் செடான் வகை கார்கள் விற்பனை முற்றிலுமாக குறைந்துள்ளது. ஆனாலும் வெர்னா வகை கார்களுக்கு மக்களின் மத்தியில் இன்றும் வரவேற்பு இருந்து வருகிறது இதன் காரணமாக ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே உள்ள வெர்னா மாடல் காரில் சில மாற்றங்களை செய்தும், புதிய அம்சங்களை புகுத்தியும் முன்னர் இருந்ததை விட மாடர்னாக புது வசதிகளுடன் நியூ-ஜென் வெர்னாஅறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    2023 நியூ இயர் ஸ்பெஷல்..! அட்டகாசமான மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

    கிராண்ட் ஐ10 நியூ ஃபேஸ் லிப்ட் (Grand i10 Nios facelift) : தற்போது சோதனையில் உள்ள கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் அடுத்த வருடம் சந்தைக்கு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அல்லாய்களைக் கொண்டு செய்யப்பட்ட சக்கரங்கள், புதுவிதமான வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் இன்னும் சில அப்டேட்டுகளுடன் இந்த கார் அறிமுகமாக உள்ளது. மேலும் ஹூண்டாய் ஹேட்ச்சிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES