உலகிலேயே 5வது பெரிய வாகன சந்தையாக திகழும் இந்தியாவின் பாதி அளவு வாகனங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது மாருதி சுசுகி நிறுவனம். இந்திய கார் விற்பனையில் 46% அளவுக்கு பங்கை கொண்டிருப்பவை தொடக்க மற்றும் காம்பாக்ட் கார்களே. நிலைமை இப்படியிருக்க ஹேட்ச்பேக் கார்களின் முக்கியத்துவம் கருதி இந்தியாவின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி தனது புத்தம்புதிய செலரியோ மாடலை சந்தையில் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
புதிய செலரியோ சற்று கூடுதல் உயரத்தை பெற்றிருக்கிறது, மேலும் 3டி ஆர்கானிக் என்ற டிசைன் அடிப்படையில் செலரியோ மேம்படுத்தப்பட்டிருந்தால் இக்காரின் முகப்பு முற்றிலும் ஸ்டைலிஷ் ஆக காட்சியளிக்கிறது. புதிய கிரிக் அமைப்பு, பம்பர், ஃபாக் லைட்டுகள், பிளாக் கலர் கிளாடிங், 15 இஞ்ச் அர்பன் பிளாக் வண்ண அலாய் வீல்கள், டெயில் லைட்டுகள், ரியர் வைப்பர், ரெப்லக்டர்களுடன் கூடிய பாடி கலர் பம்பர், ரியர் ஓவிஆர்எம் ஆகியவை குறிப்பிடத்தக்க வெளிப்புற மாற்றங்களாகும். மேலும் இக்காரின் கதவுகளை திறக்கும் கோணம் மேம்படுத்தப்பட்டுள்ளதால் உள்ளே செல்வதும், வெளியேறுவதும் ஈசியாக மாறியிருக்கின்றது.
புதிய செலரியோவின் வெளிப்புறம் மட்டுமல்லாது உட்புறமும் கவர்ச்சியான மாற்றத்தை சந்தித்திருக்கிறது, நேவிகேசன் வசதியுடன் கூடிய 7 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அட்ஜஸபிள் ஸ்டீரிங், சர்க்குலர் ஏசி வெண்ட்கள், ஸ்டீரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், புத்தம் புதிய கியர் லீவர், செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே என உட்புறமும் புதிய அம்சங்களுடன் பளிச்சிடுகின்றன.
இக்காரின் மற்றொரு புதிய மாற்றம் இதில் இடம்பெற்றுள்ள புத்தம்புதிய 3 சிலிண்டர் டூயல் ஜெட், டூடல் விடிவிடி கே10 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சினாகும்., இந்த இஞ்சின் அதிகபட்சமாக 66 பிஹெச்பி ஆற்றலையும், 89 என்.எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. மேலும் இஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களின் உதவியுடன் இக்கார் சிறப்பான மைலேஜ் தருவதாக மாருது கூறுகிறது. இக்கார் லிட்டருக்கு 26.68 கிமீ மைலேஜ் தருவதாக. ARAI அமைப்பினால் சான்றளிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
புதிய செலரியோவில் 12 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற செக்மெண்டில் முதல் முறையான அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. டூயல் ஏர்பேக்குகள், இபிடி - உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங், சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீடு அலர்ட், ஹைட் அட்ஜஸபிள் டிரைவர் சீட், கீலெஸ் எண்ட்ரி, கூடுதல் லக்கேஜ் இடவசதி அளிக்கக்கூடிய 60:40 ஸ்பிளிட் சீட்கள் போன்றவை கவனிக்கதக்க அம்சங்களாக உள்ளன.