ஹோம் » போடோகல்லெரி » ஆட்டோமொபைல் » 2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை மற்றும் விற்பனையை கருத்தில் கொண்டு பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன

 • 16

  2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

  இந்திய வாகன சந்தையில் 2022ஆம் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னனி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த அடிப்படையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்டரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளன. அந்த ஸ்கூட்டர்களில் முக்கியமான சில பிராண்டுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்

  MORE
  GALLERIES

 • 26

  2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

  பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் : தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் சுசுகி, டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட முன்னனி நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளன. சுசுகி பர்க்மென் ஸ்ட்ரீட்
  ஏற்கனவே தனது யுனிக்கான ஸ்டடைலால் இந்திய வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது  ஸ்கூட்டர் பர்க்மென் ஸ்ட்ரீட். தற்போது இதே மாடலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தயாரிக்க முடிவு செய்துள்ளது சுசுகி நிறுவனம். தற்போதிருக்கும் பெட்ரோல் ஸ்கூட்டரைப் போலவே ஸ்டைல் அண்ட் லுக்கில் மாற்றம் இல்லாமல் உருவாகிறது பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். 4Kw திறன் கொண்ட எஞ்சினுடன் தயாராக உள்ள இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

  டிவிஎஸ் கிரியோன் : ஏற்கனவே i-Qube என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ள டிவிஎஸ் நிறுவனம் தனது இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. கிரியோன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் அடுத்து ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியாகலாம். ஸ்போர்ட்ஸ் மாடலில் உருவாகும் கிரியோன் 2018 ஆம் ஆண்டுஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு தான் சாலைகளில் வலம் வரப் போகிறது. ஒரு சார்ஜில் 80 கிலோமீட்டர் தூரம் செல்லும் கிரியோன் 5.1 விநாடிகளில பூஜ்யம் கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 50 கிலோமீட்டர் வேகத்தை தொட்டுவிடும் திறன் கொண்டது என்கிறது டிவிஎஸ் நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 46

  2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

  ஆக்டிவா எலக்ட்ரிக் : ஏற்கனவே பெட்ரோல் வெரியன்டில் சக்கை போடும் ஸ்கூட்டர் ஆக்டிவா. ஜப்பான் நிறுவனான ஹோண்டா தயாரிப்பில் இந்திய ஸ்கூட்டர்களில கெத்து காட்டி வருகிறது ஆக்டிவா. அந்த ஆக்டிவா எலக்ட்ரிக் வேரியண்டிலும் கலக்க தயாராகி வருகிறது. தற்போது இருக்கும் ஆக்டிவா 6ஜி-யின் மாடலை ஒத்திருக்கும் வகையில் எலக்ட்ரிக் ஆக்டிவா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சார்ஜில் 95 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்ட பேட்டரியுடன் வர உள்ளது புதிய எலக்ட்ரிக் ஆக்டிவா.

  MORE
  GALLERIES

 • 56

  2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

  யமாஹா : இரு சக்கர வாகன உற்பத்தியில் முக்கியமான நிறுவனம் யமாஹா. இதுவரை யமாஙா நிறுவனம் தான் எலக்ட்ரிக் பக்கம் வரவில்லை. அந்த குறையும் 2023 ஆம் ஆண்டு தீர்ந்துவிடும். ஆம் யமாஹா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் யமாஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சாலைகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  2023 ஸ்பெஷல்..! வரும் வருஷத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

  ஹீரோ ஏஇ-8 : ஹீரோ எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே எல்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. அதன் அடுத்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாக தயாராகிவிட்டது. முதல் முறை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களை குறிவைத்து ஹீரோ நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வெளியிட உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு முறை சார்ஜ செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் ஹீரோ ஏஇ-8 வெளிவர உள்ளது.
  இதில் முக்கியமான அப்டேட் ஒன்றும் உள்ளது. இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையைப் பெற்ற பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரும் எலக்ட்ரிக் வேரியண்டில் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் ஐகானிக் ஸ்கூட்டரான சேட்டக் வரவைத்தான் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES