இந்திய இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் பல்வேறு டாப் பிராண்ட் பைக் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய மாடல்களை இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளன. டிவிஎஸ் ரோனின் (TVS Ronin), பஜாஜ் பல்சர் என்160 ஆகிய பைக்குகள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. சுதந்திர தின கொன்டாட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பல பிராண்ட்கள் ஸ்பெக்டரம் மாடல்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.
இந்த வார இறுதியில் ராயல் என்ஃபீல்டு, அடுத்த வாரம் ஹோண்டா, அதனைத் தொடர்ந்து ஹீரோ மோட்டோ கார்ப், ஹார்லி டேவிட்சன், டுகாட்டி என முன்னணி பைக் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமுள்ள பைக்குகள் பற்றி விரிவாக பார்க்கலாம்...
நியூ ஜெனரேஷன் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 (New-generation Royal Enfield Bullet 350):
இளைஞர்களின் கனவு பிராண்டான ராயல் என்ஃபீல்டு, மிகவும் பிரபலமான மாடலான புல்லட் 350-யை தற்போது புதிய J சீரிஸ் என்ஜின் உடன் மீண்டும் கொண்டு வந்துள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 349சிசி ஜே-பிளாட்ஃபார்ம் எஞ்சின், 20.2 ஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை உருவாக்க கூடியது. புதிய ஜெனரேஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் ஸ்ப்ளிட் டபுள் கிராடல் பிரேம், புதிய சுவிட்ச் கியர், எலக்ட்ரிக் ஸ்டார்டர், ஆன்போர்டு நேவிகேஷனுக்கான டிரிப்பர் பாட் போன்ற புதிய அம்சங்களை கொண்டுள்ளது. புதிய தலைமுறை புல்லட்டின் விலை சுமார் ரூ.1.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350):
இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது, வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஹண்டர் 350 மாடலை இம்மாதம் வெளியிட உள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் வரிசையில் இதுவும் குறைந்த விலையில் விற்பனைக்கு வர உள்ளது. Meteor 350, Classic 350 மற்றும் வரவிருக்கும் Bullet 350 போலவே, J சீரிஸ் 349cc எஞ்சின் மூலம் அதிகபட்ச பவர் 20.2 BHP மற்றும் டார்க் 27 NM உடன் இயங்க உள்ளது. இதன் தொடக்க விலை சுமார் ரூ. 1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
நியூ ஹோண்டா பிக்விங் மாடல்:
ப்ரீமியம் ரக பைக்குகளுக்கான பிரத்யேக விற்பனை கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஹோண்டா பிக்விங் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ப்ரீமியம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 5 புதிய மாடல்களை ஆகஸ்ட் 8ம் தேதி ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. டிமாண்ட் நிறைந்த இந்திய இருசக்கர வாகன சந்தையில், வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே வர உள்ள பிக்விங் மாடலில், ஃபோர்ஸா 350 மேக்ஸி-ஸ்கூட்டரும் இடம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T:
ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 2007 மாடலானது, தற்போது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T என புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாகச பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இது 4- லால்வு உடன் கூடிய இன்ஜின் மற்றும் 17-இன்ச் காஸ்ட் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. தற்போதுள்ள எக்ஸ்பல்ஸ் மாடல் 1.24 லட்சத்திற்கு விற்பனை ஆகி வரும் நிலையில், புதிய மாடல் அதைவிட அதிக விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர்:
கடந்த ஆண்டு, ஹார்லி-டேவிட்சன் புதிய ஸ்போர்ஸ்டர் எக்ஸ்ஸ்-யை அறிமுகப்படுத்தியது, இது பான் அமெரிக்கா 1250 (ADV) பிராண்டின் அப்டேட் வெர்ஷனாக வடிவமைக்கப்பட்டது. இதில் 89 ஹெச்பி மற்றும் 95 என்எம் ஆற்றலை வழங்கும் 975சிசி ரெவல்யூஷன் மேக்ஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை முந்தைய மாடலான ஸ்போர்ட்ஸ்டர் எஸ்-யின் விலையான 16.51 லட்சத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுகாட்டி ஸ்ட்ரீட் ஃபைட்டர் V2:
பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிக்கும் இத்தாலியை சேர்ந்த நிறுவனமான டுகாட்டி, அதன் முந்தைய மாடலான பனிகேல் V2 மாடலைத் தழுவி ஸ்ட்ரீட் ஃபைட்டர் V2 உருவாக்கியுள்ளது. ரேஸுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கான இது, சுஸுகி கட்டானா போன்ற பைக்குகளுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் விலை ரூ.13 லட்சத்தை விட கூடுதலாக இருக்கும் என்றும், பனிகேல் V2 மாடலின் விலையான ரூ.19.49 லட்சத்தை விட குறைவாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2022 டுகாட்டி பனிகேல் V4:
இத்தாலியைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி, தனது பீரிமியம் ஸ்போர்ட்ஸ் பைக்கான பானிகேல் V2 மாடலை 2022ம் ஆண்டுக்காக பிரத்யேகமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் எஞ்சின், எலக்ட்ரானிக்ஸ், சேஸ் மற்றும் ஏரோ ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1103சிசி வி4 இன்ஜின் 12,500rpm-ல் 210hp மற்றும் 11,000rpm-ல் 124Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. கார்பன்-ஃபைபர் போன்ற இலகுவான பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், அது வெறும் 194.5 கிலோ எடையை மட்டுமே கொண்டுள்ளது. புதிய பைக்குகள் நிலையான Panigale V4 (ரூ. 23.50 லட்சம்) மற்றும் V4S (ரூ. 28.40 லட்சம்) ஆகியவற்றை விட சற்று அதிகமான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.