எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்கிற பொதுவான கேள்வியை முன்வைக்கும் போது, பின்வரும் பதில்கள் நிச்சயமாக கிடைக்கும்.எ லெக்ட்ரிக் வாகனங்கள் ஆங்காங்கே பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது; பெட்ரோல் பங்க் பக்கமே செல்ல வேண்டிய அவசியம் இல்லை; சர்வீஸ் செய்ய ஃபிக்ஸ்டு பீரியட் எதுவும் இல்லை; புகை மாசு ஏற்பாடாது, ஆனால் தன்னிச்சையாக தீ பிடித்தும் எறியலாம்!
எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் மெதுவாகவே செல்லும்:முற்றிலும் தவறு! உண்மையில் எலெக்ட்ரிக் கார்கள் அவற்றின் ஐசிஇ சகாக்களை விட மிக வேகமாக இருக்கும். வேகத்தைப் பெற ஆர்பிஎம்-களை உருவாக்க வேண்டிய நகரும் பாகங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், இன்ஸ்டன்ட் டார்க்-ஐ வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டாரிலிருந்து எலெக்ட்ரிக் கார்கள் டக்கென்று சக்தி பெறுகின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அதிகம் செலவு செய்ய வேண்டும் :உண்மைதான். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதன் ஆரம்ப கால செலவு தற்போது அதிகமாகவே உள்ளது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனதிற்கான செலவில் பெரும்பகுதி பேட்டரி பேக்கிற்கே செல்கிறது. இருப்பினும், வரும் ஆண்டுகளில் பேட்டரி விலை வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகமொத்தம் இந்த இடத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியது - எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான செலவை பற்றி அல்ல, எரிபொருளுக்காக நீங்கள் செய்யும் செலவு முழுவதுமாக சேமிக்கப்படும் என்பதில் மட்டுமே. மேலும் ஐசிஇ வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இவி-க்களின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.
வெயில் காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தன்னிச்சையாக தீப்பிடிக்கும் : கோடை காலம் தொடங்கியதில் இருந்து, "எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது" என்கிற செய்திகளை தொடர்ச்சியாக நாம் கேட்பதால், படிப்பதால் இதை அப்படியே நம்பி விட முடியாது. இது ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் பல இவி உற்பத்தியாளர்களிடம் பேசினோம். வெப்பம் மட்டுமல்ல, மோசமான கட்டுமானத் தரம் மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்ட பிஎம்எஸ் (பேட்டரி மேனேஜ்மேண்ட் சிஸ்டம்) போன்ற காரணிகளையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
தண்ணீர் பட்டால் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஷாக் அடிக்கும் : எந்தவொரு எலெக்ட்ரிக் வாகனமும் ஓப்பன் வயர்களை கொண்டு கட்டமைக்கப்படாது. அதாவது மழையின் போது இவி-க்களை பாதுகாப்பாக தண்ணீருக்குள் செலுத்தவும் முடியும் மற்றும் பாதுகாப்பாக இயக்கவும் முடியும். இடியுடன் கூடிய மழையின் போது கூட பயப்பட வேண்டிய அவசியமில்லை.
அடிக்கடி பேட்டரி மாற்ற வேண்டும் :முன்பே குறிப்பிட்டது போல, பேட்டரி பேக்கின் விலை தான் ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் விலையில் பெரும் பகுதியாகும். உண்மைதான் பேட்டரிகளை மாற்ற வேண்டும் தான். இருப்பினும், இவி பேட்டரிகள் நாம் நினைக்கும் அளவிற்கு மிக விரைவாக திறனை இழக்காது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், ஓடோமீட்டரில் 2.4 லட்சம் கிமீ தூரம் சென்ற பிறகும் கூட பேட்டரி 90 சதவீத திறனை தன்வசம் கொண்டதாக இருக்கும்.