முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

ஃபுல் சார்ஜரில் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கும், குறுகிய சாலைகளுக்கு ஏற்ற கம்பாக்ட் காரான காமெட் இவி என்ற மின்சார காரை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது எம்ஜி நிறுவனம்.

 • 17

  குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

  இந்திய கார் சந்தையில் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சியை அடைந்து வருகிறது எம்ஜி நிறுவனம். பெரும்பாலும் இந்தியாவில் உயர் சொகுசு கார்களை அதிகம் தயாரித்து விற்பனை செய்து வந்த எம்ஜி நிறுவனம் மெல்ல மெல்ல பட்ஜெட் விலை கார்களையும் விற்பனை செய்ய முன்வருகிறது. அதோடு, மின்சார கார்கள் தயாரிப்பிலும் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் சாதாரண, நடுத்தர மக்களின் சந்தையைப் பிடிப்பதற்காக காமெட் என்ற பெயரில் கம்பாக்டான காரை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே எம்ஜி நிறுவனம் அறிவித்திருந்தது.

  MORE
  GALLERIES

 • 27

  குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

  ஆனால் எப்போது என்பது உறுதியாகச் சொல்லப்படாமல் இருந்தது. அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ள, அந்த சிறிய ரக காமெட் கார் அடுத்த மாதம்(ஏப்ரல்) அறிமுகமாக உள்ளது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதோடு, அந்தக் காரில் இருக்கும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விபரங்களும் வெளியாகியுள்ளன. எம்ஜி காமெட் இரட்டை கதவுகளை மட்டுமே கொண்ட சிறிய ரக எலெக்ட்ரிக் காராகும். இதன் இந்திய வருகையையே எம்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

  ஐந்து விதமான வண்ணங்களில் எம்ஜி காமெட் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பிங்க்  ஆகிய வண்ணங்களில் காமெட் கார் விற்பனைக்கு வர உள்ளது. சிறிய ரக காராக இருந்தாலும் பல்வேறு தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் இந்தக் காரில் உள்ளது. காமெட் மின்சார காரில் உடனடியாக காரை குளிர்விக்கும் திறன் கொண்ட ஸ்லீக் ஏசி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏசியைக் கன்ட்ரோல் செய்வதற்காக ரோட்ரி சுவிட்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 47

  குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

  இதுதவிர, பெரிய ஸ்க்ரீன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் காமெட்டில் உள்ளன. ஸ்டைலான வெர்டிகிள் ஹெட்லாம்ப், பின்புறத்தில் பெரிய ஸ்டாப் லைட், வெர்டிகிள் டெயில் லைட்ஸ் உள்ளன இந்தக் காரில். இதுதவிர இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

  MORE
  GALLERIES

 • 57

  குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

  அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கார் வெளியீட்டு நிகழ்வின் போதே இது பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம்ஜி நிறுவனத்தின் இந்த மின்சார கார் உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 17.3 kWh மற்றும் 26.7 kWh ஆகிய இரு விதமான பேட்டரி கொண்ட வேரியண்ட்களாக இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 17.3 kWh பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். 26.7 kWh பேட்டரி பேக்கில் ஓர் ஃபுல் சார்ஜில் 300க்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 67

  குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

  இந்த வாகனத்தை மிகவும் குட்டியான தோற்றத்தில் எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இந்தியாவின் நெரிசல் மிகுந்த நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், மிக மிக குறுகிய சாலைகளுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக காமெட் இருக்கும். இதன் விலையும் மற்ற கார்களோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குறைவாகவே இருக்குமு் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  குறுகிய சாலைகளுக்கு ஏற்ற குட்டி மின்சார கார்.. வருகிறது எம்ஜி காமெட்

  இந்தக் கார் 10 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்கும் எனத் தெரிகிறது. இதன் இந்திய வருகை டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் இசி3 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்கலாம் என்றும எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES