பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான Maruti Suzuki இந்த மே மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு சில லாபகரமான டிஸ்கவுன்ட் ஆஃபர்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் WagonR, Alto 800, Alto K10, Swift, Dzire, Celerio, S-Presso மற்றும் Eeco உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.61,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. மேலே குறிப்பிட்டுள்ள இந்த மாடல்களுக்கு கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ஸ் மற்றும் கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ்கள் வழங்கப்படுகின்றன. எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் மற்றும் ஃப்யூயல் ஆப்ஷனை பொறுத்து இந்த தள்ளுபடிகள் மாறுபடலாம்.
Alto K10 : STD, LXi, VXi மற்றும் VXi+ போன்ற Alto K10-ன் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்ஸ்களில் ரூ.35,000 கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் கிடைக்கிறது. மேலும் இந்த வேரியன்ட்ஸ்களில் ரூ.7,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. Alto K10-ன் ஆட்டோமேட்டிக் VXi மற்றும் VXi+ வேரியன்ட்ஸ்களுக்கு கேஷ் டிஸ்கவுன்ட் இல்லை. இருப்பினும் இந்த வேரியன்ட்களில் கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் என மொத்தம் ரூ.22,000 ஆஃபர் கிடைக்கும் . CNG-பவர்ட் VXi வேரியன்ட்டிற்கு ஒட்டு மொத்தமாக ரூ.48,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
S-Presso : பெட்ரோல் மேனுவல் S-Presso வேரியன்ட் காருக்கு ரூ.35,000 கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.6,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் உட்பட ரூ.56,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ.21,000 தள்ளுபடியுடன் வழங்கப்படும் அதே சமயம் CNG-பவர்ட் வேரியன்ட் ரூ.53,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Swift : மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் மற்றும் ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வேரியன்ட்ஸ்ளில் ரூ.52,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேனுவல் பெட்ரோல் ஸ்விஃப்ட் LXi-க்கு ரூ.47,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. VXi, ZXi மற்றும் ZXi+ வேரியன்ட்ஸ்களுக்கு ரூ.52,000 தள்ளுபடியும், ஆட்டோமேட்டிக் பெட்ரோல் VXi, ZXi மற்றும் ZXi+ வேரியன்ட்ஸ்கலக்கும் ரூ.52,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Celerio : Celerio-வின் மேனுவல் வேரியன்ட்ஸ்களான LXi, VXi, ZXi மற்றும் ZXi+ ஆகியவற்றுக்கு ரூ.30,000 கேஷ்பேக், ரூ.6,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் என மொத்தம் ரூ.51,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்ஸ்களுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.6,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.