முதலில் மே இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களால் இதன் அறிவிப்பு ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் உலகளவில் அறிமுகமாகி, பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த வாகனத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 24,500 முன்பதிவுகளை பெற்று அசத்தியுள்ளது. மேனுவல் வகைகளுக்கான காத்திருப்பு காலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று டீலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தானியங்கி வகைகளுக்கு எட்டு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ப்ளூயிஷ் பிளாக், கினெடிக் எல்லோ மற்றும் பியர்ல் ஆர்க்டிக் ஒயிட் ஆகிய சிறப்புமிக்க வண்ணங்களில் இந்த வாகனம் வரவுள்ளது. மாருதி சுஸுகியின் குருகிராம் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜிம்னி வகை கார் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் உள்நாட்டு சந்தைக்கு சுமார் 7,000 யூனிட்கள் ஒதுக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் மீதமுள்ளவை ஏற்றுமதிக்கு ஒதுக்கப்படும். ஜிம்னியின் டாப்-ஸ்பெக் ஆல்பா டிரிம் அதன் அதிக தேவை காரணமாக உற்பத்தி வரிசையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றன. ஜிம்னி ஒரு வலுவான 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் K15B பெட்ரோல் எஞ்சினைக் கொண்டு வருகிறது. இது 103 bhp பவரையும் 134 Nm டார்க்கையும் வழங்குகிறது.
இந்த காரை வாங்குபவர்கள் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்யலாம். லேடர்-பிரேம் சேஸ்ஸுடன் பொருத்தப்பட்ட, இந்த வாகனமானது சுஸுகியின் ஆல்கிரிப் ப்ரோ (AllGrip Pro) 4WD அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஒரு மேனுவல் டிரான்ஸ்பர் கேஸ் மற்றும் '2WD-high', '4WD-high' மற்றும் '4WD-low' போன்ற முறைகள் கொண்ட குறைந்த அளவிலான கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இவை சிறந்த ஆஃப்-ரோடு திறனை உறுதிசெய்ய உதவுகிறது.
இந்த ஜிம்னி வகை ஜிட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) ஆகிய இரண்டு டிரிம்களில் கிடைக்கும். டாப்-எண்ட் ஆல்ஃபா மாடலானது ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப்கள், 9 இன்ச் டச்ஸ்கிரீன், ஸ்மார்ட்பிளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்டுடன் கூடிய ESP, ஹில்-டிசென்ட் கண்ட்ரோல், ரியர்-வியூ கேமரா மற்றும் EBD உடன் ABS போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் தரப்பட்டுள்ளன.
10 லட்சம் முதல் 12 லட்சம் வரை இதன் எக்ஸ்-ஷோரூம் விலை எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்னி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் எந்த நேரடி போட்டியாளர்களும் இல்லாமல் வாகன சந்தையில் அதன் முக்கிய இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக வலுவான போட்டியாக இந்த வாகனம் இருக்கும். கார் ஆர்வலர்கள் மற்றும் SUV பிரியர்கள், மாருதி சுஸுகி ஜிம்னியின் உடனடி வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.