நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது புதிய பிரிமியம் மேட் இன் இந்தியா எஸ்யூவி-யான கிராண்ட் விட்டாராவை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இந்த மீடியம்-சைஸ் எஸ்யூவி-யின் முதல் பேட்ச் நம் யில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இருந்து லத்தீன் அமெரிக்காவிற்கு (Latin America) ஏற்றுமதி செய்து அனுப்பப்பட்டது.
லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியான் மற்றும் அண்டை பகுதிகள் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வாகனத்தை ஏற்றுமதி செய்ய மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான Hisashi Takeuchi பேசுகையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான இந்திய அரசின் முயற்சிகளை ஆதரித்து, எங்கள் நிறுவனம் சர்வதேச இருப்பை அதிகரிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
எங்களது வெற்றிக்கான முக்கிய தூண்களில் நிறுவனத்தின் ஏற்றுமதி தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவது முக்கியபடியாக நாங்கள் கருதுகிறோம். இந்த பட்டியலில் தற்போது கிராண்ட் விட்டாராவை சேர்ப்பதன் மூலம் நாங்கள் இப்போது 17 வாகனங்களை ஏற்றுமதி செய்கிறோம். கடந்த ஜூலை 2022-ல் வெளியிடப்பட்ட Grand Vitara உள்நாட்டு சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா வெளிநாட்டு சந்தைகளிலும் இதே போன்ற வெற்றியை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டு (2022) சாதனையாக மொத்தம் 2,63,068 யூனிட்களை ஏற்றுமதி செய்ததது. டிசையர், ஸ்விஃப்ட், எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ மற்றும் பிரெஸ்ஸா ஆகிய மாடல்கள் கடந்த ஆண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல்களாகும். மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 2021-ல் 205,450 யூனிட்களையும், 2020-ல் 85,208 யூனிட்களையும், 2019-ல் 107,190 யூனிட்களையும் மற்றும் 2018-ல் 113,824 யூனிட்களையும் ஏற்றுமதி செய்துள்ளது.
மாருதி சுசுகி இந்தியாவில் உள்ள SUV செக்மென்ட்டில் ஏற்றம் பெற்றுள்ளது. மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவை தவிர, நிறுவனம் அதன் சிறந்த விற்பனையான சப்-4எம் எஸ்யூவி பிரெஸ்ஸாவையும் அப்டேட் செய்துள்ளது. FY87-ல் ஹங்கேரிக்கு தனது முதல் சரக்கு ஏற்றுமதி நடவடிக்கைகளை தொடங்கிய மாருதி, இப்போது உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது.
கிராண்ட் விட்டாராவின் விலை தற்போது ரூ.10.45 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, டாப்-எண்ட் வேரியன்ட்டின் விலை ரூ.19.65 லட்சம் வரை செல்கிறது. மேற்காணும் இந்த இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். இந்த SUV 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் மோட்டார் 102 PS ஆற்றலை உருவாக்குகிறது, மற்றும் 116 PS ஐ உருவாக்கும் 1.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் யூனிட், 27.97 kmpl எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது.