ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்த மாதத்தில் (மே, 2022) அதன் பல தயாரிப்புகளுக்கு பல லாபகரமான தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் புதிய மாருதி சுசுகி காரை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த மாதம் அதற்கான சிறந்த நேரமாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் ஆஃபர்ஸ் , எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் உள்ளிட்டவற்றை பெறலாம்.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் எம்டி (Maruti Suzuki Swift MT): இந்தியாவில் மிக அதிகம் விரும்பப்படும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக இருக்கிறது மாருதி சுசுகி ஸ்விஃப்ட். இந்த மாதம் Maruti Suzuki Swift MT கார் வாங்கும் போது, அதற்கு ரூ.21,000 வரை சலுகைகளை பெறலாம். இதில் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் , ரூ.8,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் ஆஃபர் உள்ளிட்டவை அடங்கும்.
ஆல்டோ 800 (Alto 800): ஆல்டோ 800 மாருதி சுசுகியின் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் ஆகும். பெட்ரோல் மற்றும் ஆல்டோ 800 ஸ்டாண்டர்ட் வேரியன்ட் கார்களை இந்த மாதம் ரூ.21,000 வரை மலிவாக வாங்கலாம். இந்த சலுகையில் இதில் ரூ.8,000 மதிப்புள்ள கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 மதிப்புள்ள சிறப்பு கார்ப்பரேட் ஆஃபர்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
மாருதி சுசுகி டிசையர் (Maruti suzuki dzire): மாருதி சுசுகி டிசையர் என்பது ஸ்விஃப்ட்டின் சப்-4 மீட்டர் செடான் வெர்ஷன் ஆகும். மே 2022-ல், மாருதி டிசையர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.23,000 வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் ரூ. 10,000 மதிப்புள்ள கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், மேலும் ரூ. 10,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ஸ் மற்றும் ரூ. 3,000 மதிப்புள்ள கார்ப்பரேட் ஆஃபர்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso): மாருதி சுசுகியின் மினி எஸ்யூவி-யான S-Presso காரை வாங்கினால் ரூ.28,000 வரை சேமிக்கலாம். இந்த மாதத்தில் மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோவின் மேனுவல் பதிப்புகளில் ரூ.28,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகளில் ரூ.15,000 மதிப்புள்ள கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 மதிப்புள்ள ஸ்பெஷல் கார்ப்ரேட் சேல்ஸ் போனஸ் ஆகியவை அடங்கும்.
மாருதி சுசுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R): மாருதி சுசுகி வேகன் ஆர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இந்த காரும் இந்த மாதத்தில் விலை குறைவாக கிடைக்கும். இந்த காரின் 1.0-லிட்டர் வேரியன்ட்டை ரூ.38,000 வரை தள்ளுபடியுடன் வாங்க முடியும். இதில் ரூ.25,000 மதிப்புள்ள கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 மதிப்புள்ள கார்ப்பரேட் ஆஃபர்ஸ் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் காரின் 1.2-லிட்டர் வேரியன்ட்டை ரூ.18,000 வரை சலுகைகளுடன் பெறலாம். ஏனெனில் இதற்கான கேஷ் டிஸ்கவுன்ட் வெறும் ரூ.5,000 மட்டுமே.
மாருதி சுசுகி செலிரியோ (Maruti suzuki celerio): செலிரியோ காரை வாங்கினால், ரூ.33,000 வரை சேமிக்கலாம். இதில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000, கார்ப்பரேட் பெனிஃபிட் ரூ.3,000, மற்றும் ரூ.20,000 கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் அடக்கம். மேலும் விட்டாரா பிரெஸ்ஸா காரும் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் அதில் ரூ.18,000 வரை சேமிக்க முடியும். ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் தவிர, காருடன் ரூ.5,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் பெனிஃபிட்டும் உண்டு.