மார்ச் மாதத்தில் அமோக விற்பனையை கண்ட கார்களின் பட்டியல்...!
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வாகனங்களின் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
Web Desk | April 2, 2021, 6:39 PM IST
1/ 12
இந்திய உள்நாட்டு சந்தையில் 99 சதவீதம் விற்பனையாகும் 14 கார் தயாரிப்பு நிறுவனங்களில் 11 நிறுவனங்களின் விற்பனை இந்த மார்ச் மாதத்தில் 126 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை 315,946 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் விற்பனையான யூனிட்டுகள் 139,761 ஆக இருந்தது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வாகனங்களின் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஆண்டு வாகன விற்பனையில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான வாகனங்களின் விவரங்களை பின்வருமாறு காண்போம்.
2/ 12
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகியின்(Maruti Suzuki), மார்ச் மாதம் உள்நாட்டு விற்பனை 92 சதவீதம் அதிகரித்து 146,203 யூனிட்டுகளாக ஆக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை 76,240 ஆகும். அதன் ஏற்றுமதி அளவு 146 சதவீதம் அதிகரித்து 11,597 யூனிட்டுகளாக இருந்தது.
3/ 12
நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவுக்கு (Hyundai Motor) மார்ச் மாதத்தில் உள்நாட்டு விற்பனை 100 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. அதாவது மொத்தம் 52,600 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 26,300 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல ஏற்றுமதி 101 சதவீதம் அதிகரித்து 12,021 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
4/ 12
இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு, மார்ச் மாதத்தில் உள்நாட்டு விற்பனை 29,654 யூனிட்டுகளாக இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 5,676 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 422 சதவீதம் அதிகம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாதம் அதிக விற்பனையை நிறுவனம் கண்டுள்ளது. இதேபோல மொத்தம் 705 நெக்ஸன் EVக்களும் மார்ச் மாதத்தில் விற்கப்பட்டன.
5/ 12
கொரிய பிராண்டான கியா மோட்டார்ஸ் (Kia Motors) மார்ச் மாதத்தில் 123 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. மொத்த விற்பனை 19,100 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 8,583 யூனிட்டுகள் விற்பனையானது.
6/ 12
எஸ்யூவி நிபுணரான மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) மார்ச் மாதத்தில் உள்நாட்டு அளவுகளில் 435 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்நிறுவனம் இந்த மாதத்தில் 16,643 யூனிட்டுகளை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 3,111 யூனிட்டுகள் விட பலமடங்கு அதிகம். பொலெரோ, ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 300 மற்றும் தார் ஆகியவற்றிற்கான முன்பதிவுகளின் விற்பனை வலுவாக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
7/ 12
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (Toyota Kirloskar Motors) மார்ச் மாத விற்பனையில் 114 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. மொத்தம் 15,001 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. மார்ச் 2013ம் ஆண்டிலிருந்து நிறுவனம் அதிக விற்பனையை நிறுவனம் சந்தித்துள்ளது இந்த மாதத்தில் தான்.
8/ 12
பிரெஞ்சு கார் பிரண்டான ரெனால்ட் (Renault) மார்ச் மாதத்தில் 278 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது 12,356 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. நிறுவனம் தனது சமீபத்திய மாடலான கிகரை(Kiger) மார்ச் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
9/ 12
ஃபோர்டு மோட்டார் இந்தியா (Ford Motor India) மார்ச் மாதத்தில் 7,746 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 120 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3,519 யூனிட்டுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
10/ 12
ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) மார்ச் மாதங்களில் 92 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளன. இந்த மாதத்தில் சுமார் 7,103 யூனிட்டுகளை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3,697 யூனிட்டுகள் விற்பனையானது. குறைக்கடத்திகள் பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதத்தில் ஹோண்டாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
11/ 12
SAIC க்குச் சொந்தமான எம்.ஜி மோட்டார் (MG Motor) அதன் அதிகபட்ச மாதாந்திர சில்லறை விற்பனையை மார்ச் மாதத்தில் 5,528 யூனிட்டுகளாக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அடையப்பட்ட 1,518 யூனிட்டுகளின் விற்பனையை விட 264 சதவீதம் அதிகம். எம்.ஜி மோட்டார் இந்தியாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனை இந்த மாதத்தில் நிகழ்ந்துள்ளது.
12/ 12
மேக்னைட் எஸ்யூவியின் (Magnite SUV) வெற்றியைப் பொறுத்தவரை, நிசான் மோட்டார் இந்தியா (Nissan Motor India) மார்ச் மாத அளவுகளில் 386 சதவீதம் அதிகரித்து விற்பனை 4,012 யூனிட்டுகளாக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 825 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.