Mahindra XUV700 காரின் வேரியன்ட்ஸ்களுக்கான காத்திருப்பு காலம் தற்போதைய நிலவரப்படி என்னவென்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த காரின் என்ட்ரி-லெவல் MX மற்றும் AX3 டிரிம்ஸ்களின் பெட்ரோல் வெர்ஷன் 6 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டை கொண்டுள்ளன. அதே சமயம் இவற்றின் டீசல் மாடல்கள் 7 முதல் 8 மாதங்கள் வரை வெயிட்டிங் டைமை கொண்டிருக்கின்றன. XUV700 காரின் மிட்-ஸ்பெக் AX5 பெட்ரோல் மற்றும் டீசல் டிரிம்களுக்கான வெயிட்டிங் டைம் 8 மாதங்கள் வரை செல்கிறது. இருப்பினும் Mahindra XUV700-ன் அதிக ஹையஸ்ட் வெயிட்டிங் பீரியட்ஸ் கொண்ட டாப்-ஸ்பெக் வேரியன்ட்ஸ்களாக AX7 மற்றும் AX7L டிரிம்கள் உள்ளன.
மஹிந்திரா XUV 700 டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L காருக்கான காத்திருப்பு காலம் : டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட சில நகரங்களில், AX7 மற்றும் AX7L உள்ளிட்ட டாப்-என்ட் மாடல்களுக்கு, 11 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கும் மேலாக வெயிட்டிங் பீரியட் காட்டுகிறது. எனினும் கடந்த ஆண்டு நவம்பரில் நிலைமை இல்லை. அந்த நேரத்தில் அடிப்படை டிரிம்களான MX மற்றும் AX3 1 அல்லது 2 மாதங்கள் வெயிட்டிங் பீரியட்டை கொண்டிருந்தன. சில வாடிக்கையாளர்கள் எஸ்யூவியை முன்பதிவு செய்த 4 மாதங்களுக்குள் தங்கள் AX5 பெட்ரோல் வேரியன்ட்டை டெலிவரி பெற்றதாக கூறி இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் மஹிந்திரா XUV700 காரின் வெயிட்டிங் பீரியட் : கடந்த 2022-ஆம் ஆண்டில் டீசல் என்ஜின்களுடன் கூடிய MX, AX3 மற்றும் AX5 டிரிம்களுக்கு 10 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருந்தது. மேலும் AX7 மற்றும் AX7L ட்ரிம்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுக்கான வெயிட்டிங் பீரியட் 15 மாதங்கள் வரை இருந்தது. இதற்கிடையில் நீண்ட வெயிட்டிங் பீரியட்டை குறைக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தித் திறனை தற்போதைய 6,000 யூனிட்களில் இருந்து 10,000 யூனிட்டுகளாக விரிவாக்க மஹிந்திரா முடிவு செய்து இருக்கிறது.
மஹிந்திராவின் XUV 700 காரானது 2.0L டர்போ-பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. இது 5000 rpm-ல் 197 bhp அதிகபட்ச ஆற்றலையும், 1750-3000 rpm-க்கு இடையில் 380 Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மறுபுறம், டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 2.2L டர்போ எஞ்சினுடன் வருகிறது, இது 3500 rpm-ல் 182 பிஎச்பி ஆற்றலையும், 360 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.