காரின் உள்புறம் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டூயல் ஹெச்.டி. ரெசல்யூஷன் ஸ்கிரீன்- ஒன்று தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், சோனி மியூசிக் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினோ எக்ஸ் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் வெளியாகும் இந்தக் காரில், மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா இந்தியாவின் இயக்குநர் வீஜய் நக்ரா பேசும்போது, அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் வெளியாகும் முதல் எஸ்.யூ.வி மாடல் கார் மஹிந்திரா XUV700 எனத் தெரிவித்துள்ளார்.
புதிய டெக்னாலஜி வெளியாகும்போது அதனை அறிமுகப்படுத்துவதில் மஹிந்திரா முன்னணியில் இருப்பதாக கூறிய அவர், மஹிந்திராவின் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், விற்பனையிலும் அது எதிரொலிக்கும் என கூறியுள்ளார்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் MX பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 11.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் MX டீசல் வேரியண்ட்டின் விலை 12.49 லட்ச ரூபாய் ஆகவும், AX3 பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாய் ஆகவும், AX5 பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 14.99 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.