XUV300: XUV300 கார்களுக்கு ரூ.30,000 வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ரூ.10,000 வரையிலான இலவச அக்ஸசரீஸ் பெற்றுக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், இந்த காருக்கு ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்பரேட் டிஸ்கவுண்ட் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
பொலிரோ: மஹிந்திரா பொலிரோ காருக்கு கேஷ் டிஸ்கவுண்ட் கிடையாது. எனினும், நீங்கள் ரூ.15,000 எக்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் போனஸ் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். இந்தக் காருக்கு ரூ.6,000 மதிப்புள்ள இலவச அக்சஸரீஸ் வழங்கப்படும். அதுவே பொலிரோ நியோ கார்களை வாங்கினால் எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் போனஸ் என்பது முறையே ரூ.20,000 மற்றும் ரூ.4,000 ஆக இருக்கும்.
அல்ட்ராஸ் ஜி4: இருப்பதிலேயே மிக அதிகமான கேஷ் டிஸ்கவுண்ட் இந்த காருக்கு தான் அள்ளி வழங்குகிறது மஹிந்திரா நிறுவனம். மிக அதிகப்படியாக இந்தக் காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரத்யேக சிறப்புமிக்க தயாரிப்பாக மஹிந்திரா இதை கருதுகிறது. இந்தக் காருக்கு ரூ.2.2 லட்சம் வரையில் வாடிக்கையாளர்கள் டிஸ்கவுண்ட் பெறலாம்.
எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.50,000 மற்றும் கூடுதல் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆக ரூ.11,500 ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். இது மட்டுமின்றி ரூ.20,000 மதிப்புள்ள இலவச அக்ஸசரீஸ் கிடைக்கும்.