இந்த நிலையில் புதிய மேம்பட்ட பொலிரோ மேக்ஸ் பிக்அப் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம். இந்த வாகனத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த பிக்-அப்பில் 2 டன் வரை சுமை ஏற்றலாம். அந்த அளவிற்கு பே லோட் கெபாசிட்டி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பிக்அப் வாகனம் HD சீரீஸ் மற்றும் சிட்டி என இரண்டு வேரியண்ட்டுகளாக வெளிவருகிறது.
செல்லும் ரூட்டை பிளான் செய்து கொள்வது, வாகன டிராக்கிங், ஹெல்த் மானிட்டரிங் என கனெக்டிவிட்டி அம்சங்களுக்கும் குறைவில்லை. மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்அப்பில் எம்2டிஐ நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி திறனையும், 200 எம்எம் டார்க் பவரையும் வெளிப்படுத்க் கூடியது.
5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இந்த எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிமுகத்தில் சிட்டி சீரீஸ் பிக்அப் சற்று சக்தி குறைவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் சுமக்கும் திறன் 1.7 டன் தான். அதற்கேற்ற வகையில் கார்கோ பெட்டின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.. ஆனால் முழுத்திறனில் சிட்டி சீரீசில் இருக்கும் எஞ்சின் லிட்டருக்கு 17.2 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்க கூடியது. இதனால் ஓட்டுநருக்கு செலவு குறையும்.
இந்த புதிய மஹிந்திரா மேக்ஸ் பிக்அப் வாகனங்கள் 7.85 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. மிக குறைவான முன்பணமாக 24, 999 ரூபாய்க்கு முன்பதிவும் செய்யப்படுவதாக மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிக சுமை ஏற்றும் திறனோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பொலிரோ மேக்ஸ் பிக்அப் விற்பனையில் தூள் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.