சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு ழுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக வாகனம் ஓட்டுவதற்கு இந்திய சாலைகளில் மிகவும் ஆபத்தானவையாகவே இருந்து வருகின்றன.சாலைகள் மட்டுமல்ல தரமற்ற மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட கார்களும் கூட விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன. இதனையடுத்து வாகன பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில் ABS உடன் EBD மற்றும் டூயல் ஏர்பேக்ஸ்களை அரசு கட்டாயமாக்கியது.
கியா கேரன்ஸ் (Kia Carens):
பாதுகாப்பான கார்கள் என்று வரும் போது முதலிடத்தில் இருக்கிறது கியாவின் கேரன்ஸ். அனைத்து வேரியன்ட்களிலும் நிலையான 6 ஏர்பேக்ஸ்களுடன் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளது கியா கேரன்ஸ். இந்தியாவில் ரூ.8.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட Kia Carens MPV காரில் 6 சீட்டர் கொண்ட மற்றும் 6 ஏர்பேக்ஸ் அம்சத்தை பெற டாப்-என்ட் வேரியன்ட்டை வாங்க தேவை இல்லை. ஏனெனில் Kia Carens-ல் 6 ஏர்பேக்ஸ் நிலையான அம்சமாக இருக்கிறது. மேலும் 6 ஏர்பேக்ஸ் கொண்ட மலிவு விலை காராகவும் இது உள்ளது.
கியா செல்டோஸ் (Kia Seltos):
மிட்- சைஸ் SUV செக்மென்ட்டில் நடப்பாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2022 கியா செல்டோஸ், கியா கேரன்ஸ் காரை போலவே அனைத்து வேரியன்ட்களிலும் நிலையாக 6 ஏர்பேக்ஸ்களை கொண்டுள்ளது. இந்த காரின் பேஸ் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 10.49 லட்சம் ஆகும். இதன் டாப் ஸ்பெக் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.65 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாய் i20 காரின் டாப்-என்ட் வேரியன்ட்டான Asta Opt காரில் 6 ஏர்பேக்ஸ்களை கொண்டுள்ளது. இந்த வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.5 லட்சம். 6 ஏர்பேக்ஸ்களை தவிர இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரானது ABS-உடன் EBD, ஒரு ஹைலைன் TPMS, ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna):
இந்த பட்டியலில் உள்ள 6 ஏர்பேக்ஸ்களை கொண்ட ஒரே செடான் காராக இருக்கிறது ஹூண்டாய் வெர்னா. ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா எஸ்எக்ஸ் (ஓ) மாடலில் 6 ஏர்பேக்ஸ்களை வழங்குகிறது. 6 ஏர்பேக்ஸ்களை கொண்ட ஹூண்டாய் வெர்னா விலை ரூ. 11.1 லட்சத்தில் துவங்குகிறது மேலும் வேரியன்ட்ஸ்களை பொறுத்து விலை படிப்படியாக அதிகமாகிறது.