சமீபத்தில் மலிவு விலையில் 390 Adventure X -ஐ அறிமுகப்படுத்திய நிலையில், KTM இந்தியா நிறுவனம் தற்போது நாட்டில் லோ சீட் ஹைட்டுடன் கூடிய புதிய 390 அட்வென்ச்சர் V-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அறிமுகமாக உள்ள புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் வி பைக்கானது நிறுவனத்தின் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்களில் குறைந்த சீட் உயரத்தை கொண்ட வெர்ஷனாக இருக்கும். லோ சீட் ஹைட் அம்சமானது உயரம் குறைந்த ரைடர்களுக்கு பைக்கை சிறப்பாக கையாள உதவுகிறது
அறிமுகமாக உள்ள KTM 390 Adventure V-ல் சீட் ஹைட்டானது 830 மிமீ-ஆக உள்ளது. இந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் வெர்ஷனில் சீட்டின் ஹைட் சுமார் 855 மிமீ ஆகும். எனவே இந்த 2 வெர்ஷனுக்குமான சீட் ஹைட் வேறுபாடு சுமார் 25 மிமீ ஆகும். பைக்கின் ஃப்ரன்ட் மற்றும் பேக் சஸ்பென்ஷன் செட்டப்பை மாற்றியதன் மூலம், சீட்டின் ஹைட் 855 மிமீ-லிருந்து 830 மிமீ வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த உயர குறைப்பானது பைக்கை ஓட்டும் உயரம் குறைந்த குட்டையான ரைடர்கள் தங்கள் கால்களை தரையில் ஃபிளாட்டாக வைத்து கொள்ள உதவும். இதனால் உயரம் குறைந்த ரைடர்கள் பைக்கை நிறுத்தும் போது அல்லது மெதுவான வேகத்தில் பைக்கை நகர்த்தும் போதும் வசதியாக உணர்வார்கள். மேலும் பைக் விற்பனைக்கு வரும் போது மாற்றங்கள் குறித்த சரியான விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோ சீட் KTM 390 அட்வென்ச்சர் பைக் மாடலானது ப்ளூடூத், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்ஸ், கார்னரிங் ஏபிஎஸ், க்விக்ஷிஃப்டர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய TFT டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களை கொண்ட ஸ்டாண்டர்ட் டிரிம் அடிப்படையிலானதாக இருக்கும். ஃபுல் -எல்இடி லைட்ஸ், ஆஃப்-ரோடு மோடுடன் கூடிய டூயல்-சேனல் ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் 12-வோல்ட் USB சாக்கெட் போன்ற அம்சங்கள் 390 ADV ரேஞ்சில் நிலையானவை ஆகும்.
373.27 சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்ட் மோட்டார் அதன் வேலையைச் செய்வதால் பவர்டிரெயினில் எந்த மாற்றமும் இல்லை. இந்த எஞ்சின் 9,000 Rpm-ல் 43 பிஎச்பி பவரையும், 7,000 Rpm-ல் 37Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லோ சீட் ஹைட் மாடல் பைக்கின் விலை ரூ.3.38 லட்சமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.