பிரபலமான மற்றும் முன்னணி ஸ்போர்ட்ஸ் பைக் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான KTM, தனது KTM 390 Adventure பைக்கின் அப்டேட்டட் வெர்ஷனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. இந்திய மார்க்கெட்டில் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது KTM. இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கைகளின்படி, இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட KTM 390 அட்வென்ச்சரின் 3 வேரியன்ட்ஸ்களை வழங்க KTM திட்டமிட்டுள்ளது. இதில் லோ-சீட் வேரியன்ட்டும் அடங்கும். இருப்பினும், நிறுவனம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் வெளியிடவில்லை.
தற்போதுள்ள மாடலில் உள்ள அதே எஞ்சினை வரவிருக்கும் மோட்டார் சைக்கிள்களும் கொண்டிருக்கும் என அறிக்கைகள் கூறுகின்றன. அதாவது வாடிக்கையாளர்கள் 373.2CC, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சினை பெறுவார்கள். இந்த எஞ்சின் 43 BHP பவர் மற்றும் 37Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. மேலும் இந்த பைக்கின் முன்பக்கத்தில் 320mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 280mm டிஸ்க் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம், டூயல்-சேனல் ஏபிஎஸ் (dual-channel ABS) சப்போர்ட் மாறாமல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அப்டேட்டட் வெர்ஷன் என்றாலும் அதே எஞ்சின் மற்றும் பிரேக்கிங் செட்டப் வழங்கினாலும், வரவிருக்கும் 390 அட்வென்ச்சரில் டிசைன் அடிப்படையில் சில பெரிய மாற்றங்கள் இருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்களை KTM நிறுவனம் ஆச்சரியப்படுத்த கூடும் எனவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மேலும் வரவிருக்கும் KTM 390 Adventure பைக் வேரியன்ட்களில் ஸ்பிலிட்-ஸ்டைல் எல்இடி ஹெட்லைட், விண்ட்ஸ்கிரீன் வித் ஏர் டிஃப்ளெக்டர்ஸ், மஸ்குலர் ஃப்யூயல் டேங்க் , ஸ்பிளிட்-ஸ்டைல் சீட்ஸ், சைட்-ஸ்லங் எக்ஸ்சாஸ்ட், 19-இன்ச் ஃப்ரன்ட்/17-இன்ச் ரியர் அலாய் வீல்ஸ் மற்றும் வாட்நாட் போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அறிக்கைகளில் கூறப்படும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் வரவிருக்கும் 390 அட்வென்ச்சர் பைக்கின் காக்பிட்டில் TFT டிஸ்ப்ளே பொருத்தப்பட்ட,புதுப்பிக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற கூடும். இந்த அம்சம் எரிபொருள் திறன், நேவிகேஷன், கியர் ஷிஃப்ட்டிங் அலெர்ட், ஸ்பீட் வார்னிங் மற்றும் ரைடிங் மோட் போன்ற பல முக்கியமான தகவல்களை ரைடர்களுக்கு வழங்கும்.
இதனிடையே KTM 390 அட்வென்ச்சர் மற்றும் KTM 250 அட்வென்ச்சர் உள்ளிட்ட பைக்குகளை பயன்படுத்தும் யூஸர்கள் அதன் சீட்டில் அமர்வதில் மிகவும் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.ஏனெனில் இந்த பைக்குகளின் சீட்கள் சுமார் 855 மிமீ உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சீட்டின் உயரத்தால் யூஸர்கள் சிரமதி எதிர்கொள்வதை தவிர்க்கவே KTM 390 அட்வென்ச்சர் பைக்கில் விரைவில் low-seat model அறிமுகப்படுத்தப்பட உளளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோ-சீட் ஹேட் வேரியன்ட் தவிர KTM 390 அட்வென்ச்சர் புதிய வயர்-ஸ்போக்-வீல் (wire-spoke-wheel) பொருத்தப்பட்ட வெர்ஷனிலும் வெளியிடப்படலாம். பைக்கின் இந்த வேரியன்ட் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கு Adjustable suspension-னுடன் கிடைக்கும். இருப்பினும் றுவனம் இந்தியாவிற்கும் இந்த வேரியன்ட்டை கொண்டு வருமா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவலும் இல்லை.