iQOO Neo 7 5ஜி சிறப்பு அம்சங்கள் : iQOO Neo 7 இப்போது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரியுடன் வருகிறது. மீடியா டெக் மூலம் மேம்படுத்தப்பட்ட SoC பிராசெஸ்சார் உள்ளது. இதற்கு முன்னதாக Neo 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசெஸ்சார் இருந்த நிலையில், தற்போது நியோ 7 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 SoC பிராசெஸ்சார் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் கீழ்க்காணும் சிறப்பு வசதிகளை கொண்டுள்ளன.
ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் : ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆனது 5ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இது 200 MP கேமராவுடன் வெளியாகும் முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் ஆகும். இதற்கு முன்பு வெளியான ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் இல்லாத பல அம்சங்கள் இதில் உள்ளன அவற்றை இங்கே காண்போம்.